search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது குடித்து பலி"

    • மது பழக்கத்திற்கு எதிராக பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகிறது.
    • வாங் ஏற்கனவே இதே போல அடிக்கடி தான் மது குடிப்பதை சமூக வலைதளத்தில் நேரலை செய்ததால் அவரது சமூக வலைதள ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    மது பழக்கத்திற்கு எதிராக பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் சிலர் சவால் விட்டு அதிக மது பாட்டில்களை ஒரே நேரத்தில் குடித்து பலியாகும் சம்பவங்களும் நடக்கத்தான் செய்கிறது.

    சீனாவில் ஜியாங்சு மாகாணத்தை சேர்ந்த சமூக வலைதள பயனரான வாங் என்பவர் சீன வோட்கா எனப்படும் பைஜியு வகை மதுவை அதிகமாக குடித்துள்ளார். மேலும் தான் மது குடித்ததை டிக்-டாக் வெர்சனான டூயிங் என்ற வலைதளத்தில் அவர் நேரலை செய்துள்ளார்.

    அப்போது ஒரே நேரத்தில் 7 பாட்டில் மதுவை அவர் குடித்துள்ளார். இந்நிலையில் மது குடித்த 12 மணி நேரத்தில் அவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

    வாங் ஏற்கனவே இதே போல அடிக்கடி தான் மது குடிப்பதை சமூக வலைதளத்தில் நேரலை செய்ததால் அவரது சமூக வலைதள ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் அவர் புதிய கணக்கை ஆரம்பித்து மீண்டும் மது குடிப்பதை ஒளிபரப்பியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்தை தொடர்ந்து லைக்குகளை பெறுவதற்காக விபரீத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதோடு, சம்பந்தப்பட்ட வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

    ×