search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண்டைக்காடு கோவில்"

    • மாசி கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
    • இன்று நள்ளிரவு முக்கிய வழிபாடான ஒடுக்கு பவனியும், பூஜையும் நடக்கிறது.

    மணவாளக்குறிச்சி:

    குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.

    இக்கோவிலில் மாசிக் கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்தின் மாசிக் கொடை விழா கடந்த 5-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடந்து வருகிறது.

    நேற்று 9-ம் நாள் விழாவை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு உஷ பூஜை, காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, பகல் 11 மணிக்கு உண்ணாமலைக்கடை பட்டாரியர் சமுதாயம் பத்திர காளியம்மன் கோவிலிலிருந்து யானை மீது சந்தன பவனி வருதல், நண்பகல் 12 மணிக்கு பைங்குளம் ஸ்ரீகண்டன் சாஸ்தா கோவிலிலிருந்து சந்தன குடம் மற்றும் காவடி பவனி, மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை ஆகியவை நடந்தது. மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா, 6.15 மணிக்கு கூட்டுமங்கலம் ஊர் பக்தர்கள் சந்தனகுடம் சார்பில் பவனி புறப்பட்டு மண்டைக்காடு கோவில் வந்தடைந்தது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7 மணிக்கு சிறப்பு வில்லிசை, 9 மணிக்கு அத்தாழ பூஜை, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதலும் பெரிய சக்கர தீவட்டி வீதி உலா வருதலும் நடந்தது.

    ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் காலை 6 மணி முதல் 7.30 மணிவரை லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம், 7.30 மணி முதல் மாலை 9 மணிவரை பக்தி பஜனை, 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை சமய மாநாடு, 2 மணிமுதல் 3.30 மணிவரை பக்தி பஜனை, 3.30 மணிமுதல் மாலை 6 மணிவரை வில்லிசை, 6 மணிமுதல் இரவு 10 மணி வரை சமய மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதலும், இரவு 10 மணிமுதல் ஆன்மீக அருளிசை நிகழ்ச்சியும் நடந்தது.

    இனறு நள்ளிரவு முக்கிய வழிபாடான ஒடுக்கு பவனியும், பூஜையும் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் இந்த பூஜையின் சிறப்பு அம்சமாக பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் அடங்கிய சுமார் 20-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் சுத்தமான முறையில் விரதம் இருந்தவர்களால் தயாரிக்கப்படுகிறது. பின்னர் சன்னதி அருகே உள்ள சாஸ்தான் கோவில் பக்கம் இருந்து ஒடுக்கு பவனி வருகிறது.

    பூஜைக்கு எடுத்துக்கொள்ளப்படும் உணவு வகைகளை பானைகளில் வெள்ளை துணிகளால் மூடி ஊர்லமாக எடுத்து வரப்படும். பூஜைக்கான உணவு வகைகள் தலையில் சுமந்து கோவிலுக்கு எடுத்து வருகிறார்கள். பின்னர் கோவிலை ஒரு முறை வலம் வந்து அம்மனின் முன்பு உணவு வகைகள் வைக்கப்படும். பின்னர் நடை அடைக்கப்பட்டு உணவு வகைகள் அம்மனுக்கு படைக்கப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து கும்பளங்காய் மஞ்சள், நீர், சுண்ணாம்பு, பூ ஆகிய பொருட்களால் குருதி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக புறைமேளம் அடிக்கப்படுகிறது. பின்னர் நடை திறக்கப்பட்டு ஒடுக்கு பூஜை நடக்கிறது. ஒடுக்கு பவனியின் போதும் பூஜை நடக்கும்போதும் கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் பூரணமான அமைதி சூழலில் எந்தவித ஓசையும் இன்றி காணப்படும்.

    பின்னர் கொடி இறக்குதலும் நடக்கிறது. இவ்வாறு நடக்கும் பூஜையைக்காண கோவில் வளாகத்திலும் ஒடுக்கு பவனிவரும் வளாகத்திலும் அலை கடலென பக்தர்கள் திரண்டு நிற்பார்கள். இதற்காக மண்டைக்காட்டில் இப்போதே பக்தர் கள் குவியத்தொடங்கி உள்ளனர்.

    • போக்குவரத்து கழக அதிகாரி தகவல்
    • மாசி கொடை விழா வருகிற 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாசி கொடை விழா வருகிற 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான வலிய படுக்கை பூஜை 10-ந்தேதியும், பெரிய சக்கர தீவட்டி பவனி 13-ந் தேதியும், 14-ந் தேதி ஒடுக்கு பூஜையும் நடக்கிறது.

    இந்த விழாக்களில் பங்கேற்க குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராள மான பக்தர்கள் வருவது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்களின் நலன் கருதி நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம், வடசேரி பஸ் நிலையம் மற்றும் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் பொது மக்களின் நலன் கருதி ஒரு ஊரில் இருந்து 50 பயணிகள் பயணம் செய்தால் அவர்களுக்கு அந்த ஊரிலிருந்தே சிறப்பு பஸ் மண்டைகாட்டிற்கு இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    அந்த வகையில் மண்டைக்காடு கோவி லுக்கு செல்பவர்கள் போக்கு வரத்து கழக துணை மேலாளர் (வணிகம்) 9487599082, ராணிதோட்டம்-2 கிளை மேலாளர் 9487599085, ராணிதோட்டம்-3 கிளை மேலாளர் 9487599086, வடசேரி பஸ் நிலையம் 8300185777 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • முதற்கட்டமாக தற்காலிக மேற்கூரைகள் அகற்றம்
    • பரிகார பூஜைகளை அம்மன் ஏற்று கொண்டதா? என்பதை அறிய ஜோதிட பிரசன்னம் பார்க்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. பெண்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோயில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது.

    கடந்த வருடம் ஜூன் 2-ந்தேதி இக்கோவிலின் கருவறைக்கூரை திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனே தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    இதையடுத்து கோவிலில் தற்காலிகமாக மேற்கூரை அமைக்கப்பட்டது. தொடர்ந்து ஜூன் 14-ந் தேதி தேவபிரசன்னம் பார்க்கப்பட்டு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டது. தேவ பிரசன்னத்தில் ஆகம விதி மாறாமல் திருப்பணிகள் செய்யவேண்டும் என கூறப்பட்டது. இதையடுத்து கடந்த நவம்பர் 24-ந்தேதி ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அன்று தேவ பிரசன்னத்தில் கூறியபடி வாஸ்துப்படி திருப்பணிகள் நடத்த வேண்டும் என இந்து இயக்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இதை தொடர்ந்து கோவில் தந்திரி தலைமையில் இந்து இயக்க பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து குழு அமைத்து பரிகார பூஜை நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே முதலில் செய்யப்பட்ட பரிகார பூஜைகளை அம்மன் ஏற்று கொண்டதா? என்பதை அறிய கடந்த டிசம்பர் 22-ந் தேதி ஜோதிட பிரசன்னம் பார்க்கப்பட்டது.

    திருவனந்தபுரம் ஜோதிடர் கண்ணன் நாயர் ஜோதிட பிரசன்னம் பார்த்தார். அதில் அம்மன் கோபம் தணியவில்லை. அம்மனின் தீக்காயங்களை ஆராய்ந்து சுத்தமான சந்தனம் அரைத்து பூச வேண்டும்.உடனே இதை செய்யாவிட்டால் நாட்டிற்கு கேடு விளையும். குரு சன்னதியில் முறையாக பூஜை நடக்கவில்லை.காலம் காலமாக ஆச்சார அனுஷ்டானங்களுடன் நடந்து வந்த பூஜைகளை முறைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து ஜனவரி 8-ந் தேதி குரு சன்னதியில் பரிகார பூஜை நடந்தது. தொடர்ந்து மார்ச் மாதம் மாசிக்கொடை 10 நாட்கள் நடந்தது. பின்னர் கடந்த ஆவணி மாதத்தில் அசுவதி பொங்கல் விழா 3 நாட்கள் நடந்தது. இன்னும் 5 மாதத்தில் மாசிக்கொடை நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக கோவில் திருப்பணிகளை செய்து முடிக்க வேண்டும் என அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.

    இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் திருவட்டார் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள திருவட்டார் வந்த அமைச்சர் சேகர்பாபு மண்டைக்காடு வந்து திருப்பணிக்காக நடந்து வந்த மர வேலைகளை ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினார். மர வேலைகள் முடிவடைந்ததை அடுத்து நேற்று கோவில் மேற்கூரையில் அமைக் கப்பட்ட தற்காலிக கொட் டகை அகற்றும் பணி தொடங்கியது. தற்காலிக கொட்டகை அகற்றப்பட்ட தும் ஆகம விதிக்குட்பட்டு புதிய உத்திரம், பட்டியல், கழிக்கோல் அமைத்து மேற் கூரை அமைக்கப்படும் என திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    கோவிலில் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டு, 5.30 க்கு அபிஷேகம், 6.30-க்கு தீபாராதனை, நண்பகல் 12.30 க்கு உச்ச தீபாராதனை மற்றும் மாலை 6.30 க்கு தீபாராதனையும், இரவு 7.30 மணிக்கு அத்தாழ பூஜையும் நடக்கும்.

    நேற்று திருப்பணிகளுக்கு தற்காலிக கொட்டகை அகற்றும் பணி தொடங்கிய தால் உச்ச தீபாராதனை முன்னதாக முற்பகல் 11.30 மணிக்கு நடத்தப்பட்டது. புதிய கொட்டகை அமைக் கும் பணி நிறைவுறும் வரை உச்ச தீபாராதனை மட்டும் முன்னதாக 11.30 மணிக்கு நடைபெறும் என திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • 12-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
    • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா நாளை மறுநாள் (12-ந்தேதி) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

    12-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, மதியம் 12 மணிக்கு உச்சபூஜை, மாலை 5 மணிக்கு சுமங்கலி பூஜை, 6.30 மணிக்கு சாய ரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை நடக்கிறது. 13-ந்தேதி (செவ்வாய் கிழமை) காலை 8 மணிக்கு பஜனை, 10 மணிக்கு சிங்காரி மேளம், 10.45 மணிக்கு 5001 பொங்கல் வழிபாடு, 12 மணிக்கு பொங்கலுக்கு தீர்த்தம் தெளித்தல், 12.30 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. மாலையில் சிறப்பு பூஜை நடக்கிறது.

    14-ந்தேதி மூன்றாம் நாள் மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, மாலை 6 மணிக்கு தங்கரதம் பவனி, 6.30 மணிக்கு தீபாரா தனையுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    ×