என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ்காரர் இடமாற்றம்"

    • சம்பவம் குறித்து திசையன்விளை போலீஸ் நிலையத்தில் நேவிஸ் பிரிட்டோ மீது சலூன் கடைக்காரர் புகார் செய்துள்ளார்.
    • மனுவில் போலீஸ்காரர் நேவிஸ் பிரிட்டோவால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் சலூன் கடைக்காரர் கூறி இருந்தார்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் நேவிஸ் பிரிட்டோ. சம்பவத்தன்று இவரது மகன் அப்பகுதியில் உள்ள ஒரு சலூன் கடைக்கு முடி வெட்ட சென்று விட்டு வீடு திரும்பினார்.

    ஆனால் சிறுவனுக்கு சலூன் கடைக்காரர் முடியை சரியாக வெட்டவில்லை என ஆத்திரம் அடைந்த நேவிஸ்பிரிட்டோ தனது மனைவி மற்றும் மகனை அழைத்துக்கொண்டு தவறுதலாக மற்றொரு சலூன் கடைக்கு சென்றுள்ளார்.

    அப்போது அந்த சலூன் கடைக்காரர் கடையில் இல்லை. அவரை செல்போனில் தொடர்பு கொண்ட போலீஸ்காரர் அவதூறாக பேசி கடைக்கு பூட்டு போட முயன்றதாக கூறப்படுகிறது. இந்த காட்சிகளை அப்பகுதியினர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது அவை வைரலாகி வருகிறது.

    இதற்கிடையே சம்பவம் குறித்து திசையன்விளை போலீஸ் நிலையத்தில் நேவிஸ் பிரிட்டோ மீது சலூன் கடைக்காரர் புகார் செய்துள்ளார். மனுவில் போலீஸ்காரர் நேவிஸ் பிரிட்டோவால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர் கூறி இருந்தார்.

    மேலும் போலீஸ்காரர் அவதூறாக பேசிய ஆடியோவையும் அவர் ஆதாரமாக சமர்ப்பித்துள்ளார்.

    இதுதொடர்பாக வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணையின் அடிப்படையில் போலீஸ்காரர் நேவிஸ் பிரிட்டோவை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

    ×