search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் நியமனம்"

    • தேவர் ஜெயந்தி விழாவுக்கு வருபவா்களின் காலணிகளை பாதுகாக்க போலீசார் நியமிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.
    • இந்த செய்தி முற்றிலும் தவறானது என்று ராமநாதபுரம் கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் ஜெயந்தி விழா, குரு பூஜை விழாவுக்கு வருபவா்களின் காலணிகளை பாதுகாக்க போலீசார் நியமிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல் தவறானது என்று மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் 30-ந் தேதி அன்று பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் 115-வது பிறந்தநாள் விழா மற்றும் 60-வது குருபூஜை விழா நடைபெற்றது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளும் போது ஒவ்வொரு ஆண்டும் காலணிகளை விட்டுச் செல்லும் பொதுமக்கள் தரிசனம் முடிந்து திரும்ப எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டதை கருத்தில் கொண்டு இந்தாண்டு அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்களின் காலணி களை முன்பக்கம் விட்டு சென்று விட்டு நினை விடத்தில் தரிசனம் முடிந்து பின்பக்கம் வாசல் வழியாக காலணிகளை எடுத்து செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

    அத்தியாவசிய அலுவலகப்பணி காரணமாக இந்தாண்டு இதற்கான பணிகள் மேற்கொள்ளவில்லை. முக்கிய பிரமுகர்களின் காலணிகளை பாதுகாக்க காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள், வருவாய்த்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகப் பணியாளர்கள் பணி மேற்கொண்டதாக தவறான செய்திகள் வெளிவந்துள்ளது. இத்தகைய செய்தி முற்றிலும் தவறாகும். பொதுமக்களுக்கோ, முக்கிய பிரமுகர்களுக்கோ காலணிகளை பாதுகாக்க காவல் துறையினரையோ, வருவாய் துறையினரையோ, பேரூராட்சி துறையினரையோ பணி நியமிக்கப்படவில்லை.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×