என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் உயிரிழப்பு"

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் இன்று நடத்திய திடீர் தாக்குதலில் 4 போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர். #JKAttack
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவியிருக்கும் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ராணுவம் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனால் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.



    அவ்வகையில், இன்று மதியம் சோபியான் அருகே அரஹமா பகுதியில் காவல்துறையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். பழ மார்க்கெட் அருகே ரோந்து வந்தபோது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 4 போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர். போலீசாரும் பதில்  தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. கூடுதல் போலீசார் விரைந்துள்ளனர்.

    அனந்தநாக் பகுதியில் இன்று காலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.  #JKAttack

    ×