search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போரூர் ஏரி"

    • பெருங்குடி மற்றும் நெசப்பாக்கத்தில் சுத்திகரிக்கப்படும் 100 சதவீத தண்ணீரும் வீணாக கடலில் விடப்பட்டு வந்தது.
    • நெசப்பாக்கத்தில் ரூ.41கோடி செலவில் மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் போரூர் ஏரி வரை குழாய் அமைக்கும் பணிகள் தொடங்கி துரிதமாக நடைபெற்று வந்தது.

    போரூர்:

    சென்னையில் கோயம்பேடு, கொடுங்கையூர், நெசப்பாக்கம், பெருங்குடி உள்ளிட்ட நான்கு இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

    இதில் கோயம்பேடு மற்றும் கொடுங்கையூரில் மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையங்கள் வழியாக கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு தினசரி 9 கோடி லிட்டர் நீர் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    ஆனால் பெருங்குடி மற்றும் நெசப்பாக்கத்தில் சுத்திகரிக்கப்படும் 100 சதவீத தண்ணீரும் வீணாக கடலில் விடப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இந்த 2 இடங்களிலிலும் மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து பெருங்குடி மற்றும் போரூர் ஏரிகளில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதன்படி நெசப்பாக்கத்தில் ரூ.41கோடி செலவில் மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் போரூர் ஏரி வரை குழாய் அமைக்கும் பணிகள் தொடங்கி துரிதமாக நடைபெற்று வந்தது.

    இதன் மூலம் ஏற்கனவே தினசரி 8 கோடி லிட்டர் வரை சுத்திகரிப்பு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 11.7 கோடி லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து 9 கி.மீ தூரத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீர் போரூர் ஏரியில் விடப்பட்டு மீண்டும் சுத்திகரிக்கப்பட்டு மறு சுழற்சி செய்யப்படும்.

    தற்போது அந்த பணிகள் முழுவதுமாக முடிவடைந்ததையொட்டி நெசப்பாக்கத்தில் உள்ள மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வரும் சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீர் போரூர் ஏரியில் விடப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ×