search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் மீது தாக்குதல்"

    • கர்ப்பிணி பெண் ஒருவரையும் போலீசார் அடித்து உதைத்ததாக அக்கிராம மக்கள் தெரிவித்தனர்.
    • போலீசார் பெண்களை தலைமுடியை பிடித்து இழுத்து அடித்து வயிற்றில் எட்டி உதைக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ராய்ப்பூர்:

    சத்தீஷ்கர் மாநிலம் சூரஜ்பூர் மாவட்டம் தில்சிவா கிராமத்தில் சிலர் சட்ட விரோதமாக வீடுகளை கட்டி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று வருவாய் துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அங்கு சென்று ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற முயன்றனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பல ஆண்டுகளாக நாங்கள் இந்த வீடுகளில் வசித்து வருகிறோம். இதனால் வீடுகளை இடிக்க விடமாட்டோம் என அவர்கள் ஆவேசத்துடன் கூறினார்கள். இதனால் அவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த பெண்களில் சிலர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த வருவாய் அதிகாரிகளை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அந்த பெண்களை கண்மூடித்தனமாக தாக்கினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் தலைமுடியை பிடித்து இழுத்து காலால் அவர்களை எட்டி உதைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    கர்ப்பிணி பெண் ஒருவரையும் போலீசார் அடித்து உதைத்ததாக அக்கிராம மக்கள் தெரிவித்தனர். வரு வாய் துறை அதிகாரிகளை தாக்கியதாக சிலரை போலீசார் வலுக்கட்டயமாக போலீஸ் வேனில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் பெண்களை தலைமுடியை பிடித்து இழுத்து அடித்து வயிற்றில் எட்டி உதைக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

    • விவசாய நிலத்திற்கு அருகே அரசுக்கு சொந்தமான நிலம் இருப்ப தாககூறப்படுகிறது.
    • காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள வாவிபாளையம் முத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்(வயது 38) . இவர் குடும்பத்தினருடன் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் இவரது விவசாய நிலத்திற்கு அருகே அரசுக்கு சொந்தமான நிலம் இருப்பதாககூறப்படுகிறது. இந்த நிலையில் அதனை சிலர் ஆக்கிரமித்து கட்டடம் கட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து மோகன் குடும்பத்தினர் நெடுஞ்சாலைத்துறை மற்றும் முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்ததாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர்கள் சம்பவத்தன்று வீட்டில் தனியே இருந்த மோகன் மனைவி பானுப்பிரியா, அவரது உறவினர் கலாமணி, ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டியும், கைகளால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் காயம் அடைந்த 2 பெண்களும் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    ×