என் மலர்
நீங்கள் தேடியது "பெண் வெட்டி கொலை"
- பெரியகுளம் அருகே சொத்து பிரச்சினையில் அண்ணியை வெட்டிகொன்ற விவசாயி கைது செய்யப்பட்டார்.
- தென்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி மனைவி ராமுத்தாய்(60). இவர்களுக்கும் வெள்ளைச்சாமியின் தம்பியான ராஜூ(60) என்பவருக்கும் பொதுவான தோட்டம் அப்பகுதியில் உள்ளது.
இந்த தோட்டத்தின் மின்இணைப்பு ராமுத்தாய் பெயரில் உள்ளது. அண்ணன்-தம்பி 2 பேரும் சொத்தை பிரித்து கொண்டனர். அப்போது தோட்டத்தையும், ராமுத்தாய் பெயரில் உள்ள மின்இணைப்பையும் விற்க முடிவு செய்துள்ளனர்.
ஆனால் மின்இணைப்பை துண்டித்தால் தன்னால் தண்ணீர்பாய்ச்சமுடியாது எனக்கூறி ராஜூ அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆனால் அதற்கு வெள்ளைச்சாமி மற்றும் ராமுத்தாய் மறுத்துள்ளனர். இதனால் அவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று ராஜூ அரிவாளால் ராமுத்தாயை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குபதிவு செய்து ராஜூைவ கைது செய்தனர்.






