search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதியசாலை"

    • திப்பணம்பட்டி முதல் அரியப்புரம் வரையிலான சாலை மிகவும் சேதமடைந்து காணப்பட்டது.
    • சாலைகளை தரம் உயர்த்துதல் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தென்காசி:

    கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் திப்பணம்பட்டி முதல் அரியப்புரம் வரையிலான சாலை மிகவும் குண்டும் குழியுமாக சேதமடைந்து காண ப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    இந்நிலையில் புதிய சாலை அமைத்திட கோரி பொதுமக்கள் கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்திலும், மாவட்ட கலெக்டரிடமும் மனுக்கள் வழங்கி வந்தனர். தற்போது அங்கு புதிய சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை கூறுகையில்,

    இந்த சாலையானது கடந்த ஆண்டு ஊராட்சி ஒன்றிய சாலையில் இருந்து நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன், ஒவ்வொரு முறை சென்னை செல்லும் போதும் இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வே.வேலுவை சந்தித்து பேசினர்.

    அதன் பலனாக சேதமடைந்த சாலைகளை தரம் உயர்த்துதல் பணிகளுக்காக அரசு ரூ.4கோடியே 41 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்ப ட்டுள்ளது. மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கீடு பெற்றுத் தந்த தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதனுக்கும், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரைக்கும் நன்றி என தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    மேலும் திப்பணம்பட்டி, நாட்டார்பட்டி, அரியப்புரம், பூவனூர் பொதுமக்கள் சார்பாக, தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, கீழப்பாவூர் ஒன்றிய குழு தலைவர் காவேரி சீனித்துரை ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்னும் ஓரிரு நாட்களில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×