search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகுஷிமா"

    • மீனவர்கள், சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்
    • சர்வதேச அணுசக்தி முகமையும், ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பும் அனுமதி அளித்தன

    புகுஷிமா அணுஉலை நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை ஜப்பான் இன்று பசிபிக் கடலில் வெளியேற்றியது. ஜப்பான் வெளியேற்றிய நிலையில், அந்நாட்டு கடல் உணவுகள் இறக்குமதிக்கு, சீனாவின் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக தடைவிதித்துள்ளனர்.

    "நாட்டின் ஆரோக்கியம் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கு அணுசக்தியால் அசுத்தமான நீர் வெளியேற்றத்தின் அபாயங்களைத் தடுக்க ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மாற்றியமைக்கப்படும்" என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

    முன்னதாக, ஜப்பானில் 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஒரு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட சுனாமியினால் பெரும் கடல் அலைகள் ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தின் உள்ளே புகுந்து மின் மற்றும் குளிரூட்டும் அமைப்புகளை சேதப்படுத்தியது.

    மேலும் சேதத்தைத் தடுக்கவும், குளிரூட்டும் அமைப்பிற்கு மாற்றாகவும் கடல்நீர் மற்றும் போரிக் அமிலம், பெரும் அளவில் அந்த ஆலைக்குள் செலுத்தப்பட்டது. இதனால் அசுத்தமான கடல் நீர் அங்கு பெருமளவில் தேங்கியது. இந்த நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டால்தான், அணுமின் நிலையத்தை செயலிழக்க செய்யும் நீண்ட பணியை அணுமின் தொழில்நுட்ப பொறியாளர்களால் செய்ய முடியும்.

    ஆனால் இந்த நீரை கடலுக்குள் விடுவதற்கு ஜப்பான் நாட்டை சேர்ந்த உள்ளூர் மீனவர்களும், சீனா மற்றும் தைவான் உள்ளிட்ட சில கிழக்கு ஆசிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தாலும், சர்வதேச அணுசக்தி முகமையும், ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பும், சுத்திகரிக்கப்பட்ட நீர் கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று திட்டவட்டமாக கூறி இந்த நடவடிக்கைக்கு அனுமதி அளித்தது.

    இந்நிலையில் வருகிற 24-ந்தேதி சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீர் வருகிற 24-ந்தேதி வெளியேற்றப்படும் என ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அறிவித்துள்ளார்.

    • கதிர்வீச்சை தடுக்க கடல் நீர் பயன்படுத்தப்பட்டது
    • சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், ஜப்பான் தனது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது

    ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுஉலை நிலையத்தில் நிலநடுக்கம் காரணமாக அணுக்கசிவு ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த கடல் நீர் மற்றும் போரிக் அமில ரசாயனத்தை ஜப்பான் பயன்படுத்தியது. அணுக்கசிவை கட்டுப்படுத்த பயன்படுத்த கடலில் நீர்,  கதிரியக்க கழிவு நீராக மாறியது.

    அந்த நீரை சுத்திகரித்து பசிபிக் கடலில் விட ஜப்பான் முயற்சி மேற்கொண்டது. இதற்கான சுத்திகரித்து அவற்றை பேரல்களில் சேமித்து வைத்திருந்தது. ஆனால், மீனவர்கள் மற்றும் சீனா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனால், நீரை வெளியேற்றுவதற்கான அனைத்து அனுமதிகளையும் ஜப்பான் பெற்றது.

    இதனால் இன்று முதல் (ஆகஸ்ட் 24) சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீர் வெளியேற்றப்படும் என கடந்த வாரம் ஜப்பான் பிரதமர் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில், இன்று முதல் பகுதியாக சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீர் பசிபிக் கடலில் திறந்து விடப்பட்டுள்ளது. அணுஉலை நிலையத்தின் கட்டுப்பாடு அறையில் இருந்து லைவ் வீடியோ மூலம் தண்ணீர் திறந்து விடப்படும் காட்சி வெளியானது. அதில் முக்கிய ஆபரேட்டர் ஒருவர், "கடல் நீர் வெளியேற்றப்படும் பணி செயல்படுத்தப்பட்டது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • புகுஷிமாவில் இருந்து கதிர்வீச்சு வெளியேறுவதை தடுக்க கடல் நீர், போரிக் அமல் பயன்படுத்தப்பட்டது
    • 2011-ல் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீர் புகுஷிமாவில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது

    ஜப்பானில் 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஒரு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட சுனாமியினால் பெரும் கடல் அலைகள் ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தின் உள்ளே புகுந்து மின் மற்றும் குளிரூட்டும் அமைப்புகளை சேதப்படுத்தியது.

    மேலும் சேதத்தைத் தடுக்கவும், குளிரூட்டும் அமைப்பிற்கு மாற்றாகவும் கடல் நீர் மற்றும் போரிக் அமிலம், பெரும் அளவில் அந்த ஆலைக்குள் செலுத்தப்பட்டது. இதனால் அசுத்தமான கடல் நீர் அங்கு பெருமளவில் தேங்கியது. இந்த நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டால்தான், அணுமின் நிலையத்தை செயலிழக்க செய்யும் நீண்ட பணியை அணுமின் தொழில்நுட்ப பொறியாளர்களால் செய்ய முடியும்.

    ஆனால் இந்த நீரை கடலுக்குள் விடுவதற்கு ஜப்பான் நாட்டை சேர்ந்த உள்ளூர் மீனவர்களும், சீனா மற்றும் தைவான் உள்ளிட்ட சில கிழக்கு ஆசிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தாலும், சர்வதேச அணுசக்தி முகமையும், ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பும், சுத்திகரிக்கப்பட்ட நீர் கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று திட்டவட்டமாக கூறி இந்த நடவடிக்கைக்கு அனுமதி அளித்தது.

    இந்நிலையில் வருகிற 24-ந்தேதி சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீர் வருகிற 24-ந்தேதி வெளியேற்றப்படும் என ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அறிவித்துள்ளார். இன்று நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

    ×