search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீஸ் ரேட்"

    • ஒவ்வொரு நிதியாண்டிலும் மூலப்பொருட்கள், தொழிலாளர் சம்பளம், மின்கட்டணம் போன்றவை உயர்ந்து கொண்டே இருக்கின்றது.
    • கடந்த 2 ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்ட எம்ப்ராய்டரி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.

    திருப்பூர்:

    திருப்பூர் கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரி அசோசியேஷன் சார்பில் தொழில் சிக்கல்களும், தீர்வுகளும் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி தெற்கு ரோட்டரி ஹாலில் நடந்தது.

    எம்ப்ராய்டரி அசோசியேஷன் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க துணை செயலாளர் குமார் துரைசாமி பேசுகையில், எம்ப்ராய்டரி நிறுவனங்களின் பிரச்னைகளை கவனத்தில் கொள்வோம். விரைவில் நெருக்கடிகளிலிருந்து மீள்வோம் என்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தொழில்துறை ஆலோசகர் ராஜா ராமசுந்தரம் பேசினார். தொடர்ந்து, எம்ப்ராய்டரி நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் நிர்வாகிகள் பேசியதாவது:-

    ஒவ்வொரு நிதியாண்டிலும் மூலப்பொருட்கள், தொழிலாளர் சம்பளம், மின்கட்டணம் போன்றவை உயர்ந்து கொண்டே இருக்கின்ற போதும் கடந்த 15 ஆண்டுகளாக எம்ப்ராய்டரி கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை.போதுமான ஆர்டர்கள் இல்லாதது, தொழிலாளர் பற்றாக்குறை, போதுமான எம்ப்ராய்டரி கட்டணங்கள் கிடைக்க பெறாதது போன்ற காரணங்களால் கடந்த 2 ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்ட எம்ப்ராய்டரி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.இனிவரும் காலங்களில் எம்ப்ராய்டரி கட்டணத்தை பீஸ் ரேட் அடிப்படையில் மட்டுமே முடிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    ×