search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிஷப் முன் ஜாமின் மனு"

    கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை தந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பிஷப், கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு மீதான விசாரணை 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #JalandharBishop #FrancoMulakkal
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் பிராங்கோ முல்லக்கல் என்பவர் தன்னை 2014 முதல் 2016 வரை கேரளாவில் உள்ள ஒரு கான்வெண்டில் வைத்து தனது ஒப்புதலின்றி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார்.

    அதன் பேரில் ஜலந்தர் சென்ற திருவனந்தபுரம் போலீசார், பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லிடம் விசாரித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
     
    கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ஜலந்தர் பிஷப் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், இதுதொடர்பாக விசாரிக்க வேண்டியுள்ளதால் 18-ம் தேதி நேரில் ஆஜராகும்படி பிஷப் பிராங்கோ முல்லக்கல்லுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.



    இன்று அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய நிலையில், இவ்வழக்கில் தன்னை போலீசார் கைது செய்யாமல் இருக்க கேரளா ஐகோர்ட்டில் அவர் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை அனுமதித்த நீதிபதி விசாரணையை 25-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். #JalandharBishop #FrancoMulakkal
    ×