search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.ஜே.பி. அண்ணாமலை"

    • தமிழக மின் தேவையில் 40 சதவீதம் மட்டுமே சொந்தமாக உற்பத்தி செய்யப்படுகிறது.
    • கரூரில் விமான நிலையம் கொண்டு வருவது மக்களுக்காக அல்ல.

    கரூர்:

    தி.மு.க. அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து கரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் அதன் மாவட்டத்தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் கோவை சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

    இதில் மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசியதாவது:-

    மத்திய அரசு கூறியதால், மின் கட்டணத்தை உயர்த்தியதாக தெரிவித்துள்ளனர். மத்திய அரசு 28 கடிதங்கள் அனுப்பியதாக அமைச்சர் கூறுகிறார். அதனை காட்டுங்கள் என கூறுகிறேன். தமிழக மின் வாரியத்தில் ஊழல் மலிந்துள்ள தால் ரூ.1.50 லட்சம் கோடி கடனில் உள்ளது. அதனை மீட்க நடவடிக்கை எடுக்கவும் என்றுதான் மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

    தமிழக மின் தேவையில் 40 சதவீதம் மட்டுமே சொந்தமாக உற்பத்தி செய்யப்படுகிறது. 60 சதவீத மின்சாரம் விலைக்கொடுத்து வேறு, வேறு இடங்களில் வாங்கப்படுகிறது. மேட்டூர், தூத்துக்குடி, எண்ணூர் ஆகிய இடங்களில் அரசின் சொந்த மின் உற்பத்தி குறைக்கப்பட்டு வெளியே மின்சாரம் வாங்கப்படுகிறது.

    கடந்த இரு மாதங்களில் ரூ.4,600 கோடிக்கு மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. இதில் 4 சதவீதம் அமைச்சருக்கு கமிஷனாக கொடுக்கப்படுகிறது. ரூ.10-க்கு ஒரு யூனிட் மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தியவர்கள் இதுவரை ரூ.1,130 கட்டணமாக செலுத்திய நிலையில் புதிய கட்டண விகிதத்தில் ரூ.1,725 செலுத்தவேண்டும். இது 54 சதவீத கட்டண உயர்வாகும்.

    மத்திய அரசு நிலக்கரி அனுப்பவில்லை என்றனர். மத்திய அரசு வழங்கும் நிலக்கரி இல்லாமல் நீங்கள் தனியாக வாங்கிக்கொள்ளலாம் என தெரிவித்ததை அடுத்து ரூ.492 கோடிக்கு நிலக்கரி வெளியே வாங்கியுள்ளனர். இதன் மூலம் மின் உற்பத்தி செய்து ரூ.20,760 கோடிக்கு மக்களிடம் மின்சாரமாக விற்பனை செய்வார்கள்.

    தமிழகம் முன்னேறிக் கொண்டு இருக்கிறது. ஆனால், கரூரை ஏழையாக வைத்திருந்தால் மட்டுமே தேர்தலின்போது ரூ.1,000, ரூ.2,000 கொடுத்து வெற்றி பெறமுடியும் என சிலர் கூறி உள்ளனர். அமைச்சர் செந்தில்பாலாஜி, இதுவரை ரூ.100 கோடி, ரூ.10 கோடி என ரூ.170 கோடி நஷ்ட ஈடு கேட்டு 6 மானநஷ்ட வழக்கு நோட்டீஸ்கள் அனுப்பியுள்ளார். இவரை பற்றி தற்போதைய முதல்வர் 2016-ல் பேசியுள்ளார். அதனால் அவரையும் இதில் வக்காலத்துக்கு அழைப்பேன். இவற்றை பார்த்து பயப்படும் ஆள் நான் கிடையாது.

    கரூரில் பணம், உருட்டல், மிரட்டல், பொய் கஞ்சா வழக்கு மாடல் ஆட்சி நடைபெறுகிறது. பா.ஜ.க.வினரை மிரட்டி, உருட்டி, கஞ்சா வழக்கு போட்டால் மொத்த தி.மு.க.வினரும் உள்ளே போகவேண்டும். இன்னும் 40 ஆண்டுகளுக்கு மத்தியில் பா.ஜ.க. ஆட்சிதான். கரூரில் விமான நிலையம் கொண்டு வருவது மக்களுக்காக அல்ல. ஒரு ஓட்டல் மற்றும் 2 டெக்ஸ்டைல் அதிபர்கள் 420 ஏக்கர் நிலம் வாங்கி வைத்துள்ளனர். அங்குள்ள நில மதிப்பை உயர்த்தவேண்டும். கரூரில் அரசியல் மாற்றம் வரவேண்டும். அப்போது ஜவுளி பூங்கா உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் பா.ஜ.க. கொண்டு வரும் என்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×