search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.ஓ.எஸ். கருவி"

    • ஆன்-லைன் மூலம் வரிவசூல்செய்யும் பணியினை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முக சிகாமணி தொடங்கி வைத்தார்.
    • ஊராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்த பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் முதல்முறையாக பூங்குணம் ஊராட்சியில் ஆன்-லைன் மூலம் வரிவசூல்செய்யும் பணியினை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முக சிகாமணி தொடங்கி வைத்தார். தமிழக அரசு ஊராட்சி களில் வரிவசூல்செய்யும் பணியினை ஆன்லைன் முறையில்மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட அளவில் முதன் முதலில் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம், பூங்குணம் ஊராட்சியில் வரிவசூல் பணிக்காக பி.ஓ.எஸ். கருவியை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முக சிகாமணி வழங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர்கூறு கையில், பொதுமக்களி டமிருந்து நேரடியாக வரி வசூல் செய்யப்படுவதற்கு மாற்றாக வங்கிகள் மூலமாகவும், நெட் பேங்கிங் மூலமாகவும், 'ஜிபே' மூலமும் வரிகளை அரசு கணக்கில் சேர்க்கலாம். இந்த ஊராட்சியை மாதிரி ஊராட்சியாக தேர்ந்தெடுத்துள்ளோம். ஆகவே இந்த பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்'' என்றார்.

    பின்னர் ஊராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்த பதிவேடுகளை ஆய்வு செய்தார். ஊராட்சியில் தகுதியுள்ள முதியோர்கள் அனைவருக்கும் 100 சதவீதம் முதியோர் உதவித் தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டுக் கொண்டார். இதில் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, துணைவட்டார வளர்ச்சி அலுவலர் வீரமணி, ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி வெங்கடேசன், துணை தலைவர் லட்சுமி, ஊராட்சி செயலாளர்கள் ராஜ்குமார், ஆரோக்கியராஜ் உடனிருந்தனர்.

    ×