search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பறக்கும் வாகனம்"

    • இஸ்ரேலை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் தனிநபர் பறக்கும் வாகனத்தை உருவாக்கி இருக்கிறது.
    • இந்த தனிநபர் பறக்கும் வாகனம் முழு சார்ஜ் செய்தால் 100 மைல் அதாவது 160 கிமீ வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    இஸ்ரேலை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் பொது மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பயணிக்க செய்யும் எலெக்ட்ரிக் வாகனத்தை உருவாக்கி இருக்கிறது. இந்த வாகனம் போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளின் மேல் பறந்து செல்லும் திறன் கொண்டிருக்கிறது. முதற்கட்டமாக சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கும் இந்த பறக்கும் வாகனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

    இஸ்ரேல் நாட்டின் AIR எனும் ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவவாக்கி இருக்கும் இந்த பறக்கும் வாகனத்தில் ஒரே சமயம் இருவர் பயணம் செய்ய முடியும். இருவரில் ஒருவர் வாகனத்தை இயக்குவார், மற்றொருவர் பயணி ஆவர். முழு சார்ஜ் செய்தால் இந்த பறக்கும் கார் 100 மைல் அதாவது 160 கிலோமீட்டர் வரை செல்லும் ரேன்ஜ் கொண்டிருக்கிறது.

    உலகில் பல்வேறு நிறுவனங்கள் இதுபோன்ற வாகனத்தை உருவாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த வாகன பயன்பாட்டு முறை காலப்போக்கில் பொதுவான ஒன்றாக மாறும் என ஸ்டார்ட்அப் நிறுவனமான AIR தெரிவித்து இருக்கிறது.

    "இது மிக முக்கிய மைல்கல். நாங்கள் போக்குவரத்து முறையில் முன்னேறி இருக்கிறோம்... இதன் மூலம் AIR ONE மாடலை அதிக உற்பத்தி செய்யும் இலக்கை அடைய நெருங்கி விட்டோம்," என AIR நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ராணி பைலட் தெரிவித்து இருக்கிறார்.

    ×