search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணியாளார்கள்"

    • ஆர்.எஸ்.மங்கலம் அருகே சவேரியார்பட்டிணத்தில் புதுப்பிக்கப்பட்ட புனித சவேரியார் ஆலயம் திறக்கப்பட்டது.
    • விழாவிற்கான ஏற்பாட்டை பங்கு பணியாளர்கள், கிராம அருள் பணியாளர்கள், கிராம இறைமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    ஆர்.எஸ்.மங்கலம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா சவேரியார் பட்டினத்தில் பிரசித்தி பெற்ற புனித சவே ரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தை கடந்த சில மாதங்களாக புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் பணிகள் முடிக் கப்பட்டு ஆலயம் புனிதப்ப டுத்துதல் விழா நேற்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.

    மாலை 5.30 மணி அள வில் பாளையங்கோட்டை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ், சிவகங்கை மதுரை மாவட்ட பொருளாளர் சந்தியாகு, ஆர்.எஸ்.மங்கலம் முன் னாள் வட்டார அதிபர் ஆரோக்கியசாமி அடிக ளால், தற்போதைய வட்டார பங்கு அதிபர் தேவசகாயம் ஆகியோருக்கு சவேரியார் பட்டணத்தில் உள்ள புனித சவேரியார் உயர்நிலைப் பள்ளியில் மேளதாளங்கள் முழங்க வானவேடிக்கை யுடன் கிராம இறைமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிறப்பான வரவேற்பு அளித் தனர்.

    இதனைத்தொடர்ந்து கிராம மக்கள் புடைசூழ ஆயர் உட்பட அனைத்து பங்குத் தந்தகளையும் ஊர்வ லமாக புனித சவேரியார் ஆலயம் அருகே உள்ள சவேரியார் புனித திருக் கொடி கம்பம் அமைந்துள்ள இடத்திற்கு அழைத்து வந்தனர். மாலை 6 மணி அளவில் பங்குத் தந்தைகள் சேவியர் சேஷா, பிரசாத் மற்றும் கிராம இறை மக்கள் முன்னிலையில் ஆர்.எஸ்.மங்கலம் முன்னாள் வட் டார அதிபர் ஆரோக்கிய சாமி அடிகளால் புனித சவேரியார் கொடிக்கம்பத் தின் அடியில் உள்ள கல் வெட்டை திறந்து வைத்தார்.

    சிவகங்கை மறை மாவட்ட பொருளாளர் சந்தியாகு திருக்கொடி மரம் புனிதப்படுத்தி வைத்தார். இதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் பாளையங்கோட்டை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் புதுப்பிக் கப்பட்ட புனித சவேரியார் ஆலயத்தை திறந்து வைத்து ஆலய புனிதப்படுத்தினார்.

    பின்னர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. முன்னதாக ஓரிக்கோட்டை சென்னை தொழிலதிபர் அமுல்ராஜ் திருப்பீடத்தை திறந்து வைத் தார். ஆர்.எஸ்.மங்கலம் வட்டார அதிபர் தேவசகா யம் புனிதர்களின் கெவியை புனிதப்படுத்தினார். இரவு 8.30 மணியளவில் விழாவில் கலந்து கொண்ட ஆயர், பங்குதந்தைகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனை வருக்கும் நன்றியும் பாராட் டும் தெரிவிக்கப்பட்டது.

    விழாவில் சிறப்பு அழைப் பாளராக அருட் சகோதரி கள், ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், புல்லமடை ஒன்றிய கவுன்சிலர் பிரபு, புல்லமடை ஊராட்சி மன்ற தலைவர் கனிமொழி இளை யராஜா கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாட்டை பங்கு பணியாளர்கள், கிராம அருள் பணியாளர்கள், கிராம இறைமக்கள் சிறப் பாக செய்திருந்தனர்.

    இதில் சுற்று வட்டா ரத்தைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் பெருந்திர ளாக கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்த அனைவ ருக்கும் இரவு அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.திறப்பு விழாவை முன்னிட்டு கடந்த 20-ந்தேதி கபாடி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத் தின் பல்வேறு பகுதியில் இருந்து அணிவீரர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    ×