search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பண மோசடி"

    • கரண் சிங் குமாரை போலீசார் கைது செய்தனர்.
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புவனேஸ்வர் :

    ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரை தலைமையிடமாக கொண்டு நிதி தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.

    இந்த நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் நொய்டாவை சேர்ந்த மற்றொரு நிதி தொழில்நுட்ப நிறுவனத்துடன் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு ஒப்பந்தம் செய்து கொண்டது.

    அந்த ஒப்பந்தத்தின் கீழ் வணிக பயன்பாட்டிற்காக புவனேஸ்வர் நிதி தொழில்நுட்ப நிறுவனம், நொய்டா நிறுவனத்துக்கு யூபிஐ (பண பரிமாற்றத்துக்கான அடையான எண்) விவரங்களை வழங்கியது.

    இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட நொய்டா நிறுவனத்தின் இயக்குனர்களான கரண் சிங் குமார் மற்றும் அவரது சகோதரர் லாலு சிங் ஆகியோர் புவனேஸ்வர் நிதி நிறுவனத்தின் கியூ.ஆர். கோடுக்கு பதிலாக தங்களது நிறுவனத்தின் கியூ.ஆர் கோடை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டனர்.

    இந்த மோசடியின் மூலம் புவனேஸ்வர் நிறுவனத்துக்கு செல்ல வேண்டிய சுமார் ரூ.14 கோடியை நொய்டா நிறுவனத்தின் இயக்குனர்கள் சுருட்டினர்.

    புவனேஸ்வர் நிறுவனம் தங்களது வங்கி கணக்கின் இருப்பை பரிசோதித்தபோது தான் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து அந்த நிறுவனம் உடனடியாக இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தது.

    அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கியூ.ஆர். கோடை பயன்படுத்தி மோசடி நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நொய்டா நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான கரண் சிங் குமாரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த மோசடியில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×