search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தர்களுக்கு கட்டுப்பாடு"

    • சபரிமலை மண்டல பூஜை, மகரவிளக்கு சீசன் தொடங்குவதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அய்யப்ப பக்தர்கள் கோவிலுக்கு செல்கின்றனர்.
    • வனப்பகுதி வழியாக செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு இடுக்கி மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    கூடலூர்:

    கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வரு கின்றனர். பெரும்பாலான பக்தர்கள் தமிழகம் வழியாகவே கோவிலுக்கு சென்று வருகின்றனர். இதனால் தமிழக அரசு சார்பில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    நாளை கார்த்திகை மாத பிறப்பையொட்டி இன்று சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டுள்ளது. மேலும் மண்டல பூஜை, மகரவிளக்கு சீசன் தொடங்குவதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அய்யப்ப பக்தர்கள் கோவிலுக்கு செல்கின்றனர்.

    வனப்பகுதி வழியாக செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு இடுக்கி மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி சத்திரம் வழியாக காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், அழுதகடவு வழியாக காலை 7 மணி முதல் மதியம் 2.30 மணி வரையிலும் முக்குழி வழியாக காலை 7 மணி முதல் மதியம் 3.30 மணி வரையிலும் பக்தர்கள் சபரிமலைக்கு செல்லலாம். அங்கிருந்து சத்திரத்துக்கு திரும்ப காலை 9 மணி முதல் முதல் 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    சபரிமலை சீசனை யொட்டி பல்வேறு ஓட்டல்கள், பேக்கரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் விலை நிர்ணயம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு இடுக்கி மாவட்ட கலெக்டர் ஷீபா ஜார்ஜ் உத்தரவிட்டு ள்ளார்.

    பத்தினம்திட்டா, கோட்ட யம் மாவட்டங்களில் உணவு வகைகளின் தரம், அளவு ஆகியவற்றை கணக்கிட்டு அதற்கேற்ப விலை நிர்ணயம் செய்து கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×