search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெய்வேலி என்எல்சி சுரங்கம்"

    • சுரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதியில் பணிபுரிந்த தொழிலாளிக்கு எவ்வித உயிர் சேதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
    • தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான கன்வேயர் பெல்ட் எந்திரம் முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்துள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

    நெய்வேலி:

    நெய்வேலியில் என்.எல்.சி. இந்திய நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இங்குள்ள திறந்தவெளி நிலக்கரி சுரங்கங்களில் பழுப்பு நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மட்டுமல்லாமல், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

    நேற்று நள்ளிரவில் என்.எல்.சி.யில் உள்ள சுரங்கம் 1 ஏ-வில், நிலக்கரியை சுரங்கத்திலிருந்து வெளியே கொண்டு வரும், கன்வேயர் பெல்ட் எந்திரம், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட, மின்கசிவால், திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் வான் உயரத்திற்கு தீயானது பரவி, சுரங்கம் முழுவதும் புகைமண்டலமாக மாறி உள்ளது.

    சுரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதியில் பணிபுரிந்த தொழிலாளிக்கு எவ்வித உயிர் சேதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த என்எல்சி தீயணைப்புத் துறையினர், விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான கன்வேயர் பெல்ட் எந்திரம் முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்துள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

    தற்போதுநெய்வேலி முதலாவது சுரங்க விரிவாக்கத்தில், எந்திரம் தீப்பற்றி எரியக்கூடிய வீடியோ வெளியாகி சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

    ×