search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நானாஜி தேஷ்முக்"

    முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நானாஜி தேஷ்முக், பூபேன் ஹசாரிக்கா ஆகியோர் நாட்டின் மிகவும் உயரிய ‘பாரத ரத்னா’ விருதுக்கு இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளனர். #NanajiDeshmukh #BhupenHazarika #PranabMukherjee #BharatRatna
    புதுடெல்லி:

    கல்வி, சுகாதாரம் மற்றும் கிராமப்புறங்களின் தன்னிறைவு ஆகியவற்றுக்காக தொண்டாற்றிய பிரபல சமூகச்சேவகரான நானா தேஷ்மும் பாரதிய ஜனசங்க தலைவர்களில் குறிப்பிடத்தக்கவராவார்.  கடந்த 2010-ம் ஆண்டு காலமான இவர் முன்னர் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். பத்ம விபூஷன் விருதும் பெற்றுள்ளார்.

    அசாம் மாநிலத்தை சேர்ந்த பூபேன் ஹசாரிக்கா பிரபல கவிஞர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முக திறமைகள் பெற்றவராவார். கடந்த 2011-ம் ஆண்டில் இவர் காலமானார்.

    பாராளுமன்ற உறுப்பினராக பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம்பெற்ற முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி(83), காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய மந்திரிசபைகளில் நிதி, ராணுவம் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரியாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ‘பாரத ரத்னா’ விருதுக்கு  தேர்வு செய்யப்பட்டுள்ள இவர்கள் மூவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார். #NanajiDeshmukh #BhupenHazarika #PranabMukherjee #BharatRatna
    ×