search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாட்டுச்சோள குழிப்பணியாரம்"

    நாட்டுச்சோளத்தில் புரதம், இரும்பு, கால்சியம், நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று நாட்டுச்சோளத்தில் குழிப்பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    நாட்டுச்சோளம் - 1 கப்
    இட்லி அரிசி - கால் கப்
    உளுந்து - 2 டீஸ்பூன்
    வெங்காயம் - 1
    கொத்தமல்லி - சிறிதளவு
    ப.மிளகாய் - 3

    தாளிக்க

    கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இட்லி அரிசி, சோளம், உளுந்து மூன்றையும் இரண்டு மணிநேரம் ஊற வைக்கவும். பின்பு உப்பு, நீர் சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து மூன்று மணிநேரம் புளிக்க விடவும்.

    வாணலியில், எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு சிறிதளவு பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வதக்கியவற்றையும், பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை மாவில் கொட்டி நன்கு கலக்கி குழிப்பணியார சட்டியில் ஊற்றி சுட்டெடுக்கவும்.

    சுவையான நாட்டுச்சோள குழிப்பணியாரம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×