search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எல்.ஜி. வி40 தின்க்யூ"

    எல்.ஜி. நிறுவனம் தனது முதல் ஹைப்ரிட் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. எல்.ஜி. வாட்ச் டபுள்யூ7 என இந்த வாட்ச் அழைக்கப்படுகிறது. #LGWatchW7



    எல்.ஜி. நிறுவனம் வி40 தின்க்யூ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனுடன் எல்.ஜி. வாட்ச் டபுள்யூ7 ஸ்மார்ட்வாட்ச் மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. 

    எல்.ஜி. நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் ஸ்மார்ட்வாட்ச் மாடலாக அமைந்திருக்கும் டபுள்யூ7 கூகுளின் வியர் ஓ.எஸ். மற்றும் வழக்கமான கடிகாரங்களில் உள்ளதை போன்ற முள் அமைப்பு கொண்டுள்ளது. குவார்ட்ஸ் அசைவுகளுடன், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த சோப்ராட் எஸ்.ஏ. உடன் இணைந்து எல்.ஜி. உருவாக்கியிருக்கிறது. இதில் ஆல்டிமீட்டர், பாரோமீட்டர், ஸ்டாப்வாட்ச், டைமர் மற்றும் காம்பஸ் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் நாள் முழுக்க பேக்கப் வழங்கும் பேட்டரி கொண்டுள்ளது.

    வழக்கமான பயன்பாடுகளில் இரண்டு நாட்கள் வரையிலும், அனலாக்-ஒன்லி (analog-only) மோடில் வைத்தால் மூன்று முதல் அதிகபட்சம் நான்கு நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என எல்.ஜி. தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் அம்சங்களை டிசேபிள் செய்த நிலையில், 100 நாட்கள் முதல் அதிகபட்சம் மூன்று மாதங்களுக்கு இயங்கும்.



    எல்.ஜி. வாட்ச் டபுள்யூ7 சிறப்பம்சங்கள்:

    - 1.2 இன்ச் 360x360 பிக்சல் வட்ட வடிவம் கொண்ட எல்.சி.டி. டிஸ்ப்ளே
    - 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 2100 பிராசஸர்
    - 768 எம்.பி. LPDDR3 ரேம்
    - 4 ஜி.பி. eMMC
    - கூகுளின் வியர் ஓ.எஸ்.
    - டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (IP68)
    - அசைவுகள்: 2 ஹேன்ட்ஸ் குவார்ட்ஸ் மூவ்மென்ட் / மைக்ரோ கியர்பாக்ஸ்
    - புளூடூத் 4.2 LE, வைபை, யு.எஸ்.பி. டைப்-சி 2.0
    - சென்சார்கள்: 9-ஆக்சிஸ் (கைரோ/ அக்செல்லோமீட்டர்/ காம்பஸ்), பிரெஷர் சென்சார்
    - 240 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    எல்.ஜி. வாட்ச் டபுள்யூ7 கிளவுட் சில்வர் நிறத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வழக்கமான 22 எம்.எம். வாட்ச் பேன்ட்களுடன் பொருந்திக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் எல்.ஜி. வாட்ச் டபுள்யூ7 விலை 450 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.33,250 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    எல்.ஜி. நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் வி40 தின்க்யூ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் எல்.ஜி. ஐந்து கேமராவை வழங்கியுள்ளது. #LGV40ThinQ



    எல்.ஜி. நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் வி40 தின்க்யூ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய எல்.ஜி. ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் விஷன் OLED டிஸ்ப்ளே, முந்தைய ஸ்மார்ட்போனை விட மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    புதிய எல்.ஜி. ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக ஐந்து கேமரா செட்டப் இருக்கிறது. எல்.ஜி. வி40 தின்க்யூ ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமராக்கள்: 16 எம்.பி. 107-டிகிரி சூப்பர் வைடு ஆங்கிள், 12 எம்.பி. ஸ்டான்டர்டு ஆங்கிள் மற்றும் 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் 2X சூம் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. 



    மூன்று கேமராக்களில் உள்ள டிரிபில் ஷாட் அம்சம் புகைப்படங்களை ஒன்றாக அடுக்கி, சிறிய வீடியோ போன்று உருவாக்கும். இதனை பயனர்கள் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ள முடியும்.

    முன்பக்கம் செல்ஃபிக்களை எடுக்க 5 எம்.பி. வைடு-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 8 எம்.பி. ஸ்டான்டர்டு கேமரா வழங்கப்பட்டுள்ளது. கேமரா ஆப் திறக்கும் போது ஸ்கிரீனில் காணப்படும் ஸ்லைடர் கொண்டு பொக்கே எஃபெக்ட் மாற்றிக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் PDAF அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது, இது 50% வேகமாகவும் மேம்படுத்தப்பட்ட ஹெச்.டி.ஆர். அம்சம் வழங்கப்பட்டுள்ளது.



    எல்.ஜி. வி40 தின்க்யூ சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 3120x1440 பிக்சல் 19.5:9 ஃபுல் விஷன் OLED டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
    - அட்ரினோ 630 GPU
    - 6 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ எல்.ஜி. UX
    - 12 எம்.பி. கேமரா, f/1.5, 1.4µm பிக்சல், 78° லென்ஸ்
    - 16 எம்.பி. சூப்பர் வைடு கேமரா, f/1.9, 1.0µm பிக்சல், 107° லென்ஸ்
    - 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, f/2.4, 1.0µm பிக்சல், 45° லென்ஸ், டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.9, 1.12μm பிக்சல், 80° லென்ஸ்
    - 5 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா, f/2.2, 1.12μm பிக்சல், 90° வைடு ஆங்கில் லென்ஸ்
    - கைரேகை சென்சார்
    - வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68), MIL-STD 810G
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 32-பிட் மேம்படுத்தப்பட்ட ஹை-பை குவாட் DAC
    - DTS: X 3D சரவுன்டு சவுன்ட், பூம்பாக்ஸ் ஸ்பீக்கர்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3,300 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - குவால்காம் குவிக் சார்ஜ் 3.0, வயர்லெஸ் சார்ஜிங்

    எல்.ஜி. வி40 தின்க்யூயூ ஸ்மார்ட்போன் புதிய அரோரா பிளாக், புதிய பிளாட்டினம் கிரே, மொராக்கன் புளு மற்றும் கார்மைன் ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. #LGV40ThinQ #smartphone
    எல்.ஜி. நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் வி40 தின்க் ஸ்மார்ட்போனின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. #LGV40ThinQ



    எல்.ஜி. நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் டீசர் வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது. 

    அக்டோபர் 3-ம் தேதி அறிமுகமாக இருக்கும் புதிய வி40 தின்க் ஸ்மார்ட்போனில் மொத்தம் ஐந்து கேமராக்கள் வழங்கப்படுகிறது. மூன்று பிரைமரி கேமராக்கள் மற்றும் இரண்டு டூயல் செல்ஃபி கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது.

    ஸ்மார்ட்போன் சேன்டு-பிளாஸ்ட் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டு இருப்பதால், பயன்படுத்தும் போது மென்மையான உணர்வு ஏற்படும் என எல்.ஜி. தெரிவித்துள்ளது. மேலும் இந்த தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனில் கீறல்கள், கைரேகை அச்சு அல்லது அழுக்கு போன்றவற்றை தவிர்க்கும் தன்மை கொண்டுள்ளது.

    புதிய எல்.ஜி. ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் மெட்டல் ஃபிரேம், பின்புறம் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய பிளாட்டினம் கிரே, கார்மைன் ரெட் மற்றும் மொரக்கன் புளு உள்ளிட்ட நிறங்களை கொண்டுள்ளது. 

    எல்.ஜி. வி40 தின்க் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஸ்கிரீன், மெல்லிய பெசல்கள், ஒரே கையில் பயன்படுத்த ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் 2 ~ 3எம்.எம். அளவில் இலுமினேஷன் சென்சார் மற்றும் லேசர் சென்சார் கேமராவின் முன் மற்றும் பின்புறம் வைக்கப்பட்டுள்ளது.

    எல்.ஜி. வி40 தின்க் ஸ்மார்ட்போனின் டீசர் வீடியோவை கீழே காணலாம்..,

    எல்ஜி நிறுவனத்தின் வி40 தின்க் ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. #LGV40ThinQ



    எல்ஜி நிறுவன ஸ்மார்ட்போன்கள் அந்நிறுவன வழக்கத்திற்கு மாறாக வெளியிடப்படுகிறது. எல்ஜி வி30 ஸ்மார்ட்போன் பலமுறை மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டன, ஜி7 தின்க் ஸ்மார்ட்போன் பல்வேறு வேரியன்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் எல்ஜி வி40 தின்க் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.

    எல்ஜி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் ஒன்றாக எல்ஜி வி40 இருக்கிறது. சமீபத்தில் அக்டோபர் 3-ம் தேதி விழாவுக்கான அழைப்புகளை எல்ஜி வெளியிட்டது. இதனுடன் "Take 5" என்ற வாசகம் இடம்பெற்றிருந்ததை தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போனில் ஐந்து கேமரா செட்டப் வழங்கப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    வி40 சீரிஸ் அதிகளவு லீக் ஆகவில்லை என்றாலும், சிலமுறை இதன் விவரங்கள் வலைத்தளங்களில் தோன்றி இருக்கிறது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் புதிய எல்ஜி ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா சென்சார் மற்றும் இரண்டு செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.



    சமீபத்தில் லீக் ஆன வடிவமைப்பில் இதன் தோற்றம் பார்க்க எல்ஜி வி30 மாடலை போன்று காட்சியளித்தது. எனினும் புதிதாக நாட்ச் மற்றும் கூடுதல் கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    புதிய எல்ஜி வி40 தின்க் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் என்ற வகையில் இந்த மாடலில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 1440 பிக்சல் டிஸ்ப்ளே, குறைந்தபட்சம் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முந்தைய ஸ்மார்ட்போன் மாடல்கள் எதிர்பார்த்த வெற்றியை வழங்காத நிலையில், புதிய வி40 ஸ்மார்ட்போன் சந்தையில் எத்தகைய வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தனது ஸ்மார்ட்போன்களில் டீப் தின்க் பிளாட்ஃபார்ம் சேர்த்திருப்பதை எல்ஜி கடந்த ஆண்டு அறிவித்தது. 

    இந்நிலையில், சிங்குளர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஸ்மார்ட்போன்கள், தொலைகாட்சி, குளிர்ச்தான பெட்டிகள், குளிரூட்டிகள், ஸ்பீக்கர்கள் மற்றும் ரோபோட் உள்ளிட்டவற்றுக்கு வழங்க எல்ஜி திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.
    ஏமன் நாட்டில் 40 குழந்தைகள் உள்பட 51 உயிர்களை பறித்த விமான தாக்குதலுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் வருத்தம் தெரிவித்துள்ளன. #Saudiledcoalition #Yemenbusstrike
    ரியாத்:

    ஏமனில் உள்ள ஹவுத்தி போராளிகள் சவுதி நாட்டின் ஜிசான் நகரின் மீது கடந்த மாதம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் சடா நகரின் பிரபல மார்க்கெட் பகுதியின் மீது வான்வழி தாக்குதல்களில் ஈடுபட்டன.

    பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் மிக தாழ்வாக பறந்து சென்ற போர் விமானங்கள் நடத்திய தாக்குதலின்போது அவ்வழியாக சென்ற பஸ் மீது பல ஏவுகணைகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் 40 குழந்தைகள் உள்பட 51 பேர் உயிரிழந்தனர். 51 குழந்தைகள் உள்பட 79 பேர் படுகாயம் அடைந்தனர்.

    குழந்தைகள் சென்ற பஸ் மீது நடத்தப்பட்ட இந்த மனிதாபிமனற்ற தாக்குதல் தொடர்பாக நியாயமான பன்னாட்டு குழுவினரின் விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தி இருந்தது.

    இந்த தாக்குதலின்போது பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை என பின்னர் தெரியவந்தது. 

    இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய சவுதி தலைமையிலான கூட்டுப் படையை சேர்ந்த உயரதிகாரிகள் தங்கள் பக்கம் தவறுகள் உள்ளதற்காக இன்று வருத்தம் தெரிவித்ததுடன், இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். #Saudiledcoalition  #Yemenbusstrike
    ×