என் மலர்
நீங்கள் தேடியது "தொழிற்சாலைக்கு சீல்"
- கடந்த 3 ஆண்டுகளாக அனுமதி யின்றி ஏலக்காய் பதப்படு த்தும் தொழிற்சாலை செயல்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அந்ததொழிற் சாலையை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
- 1994-ன்படி அரசு அனுமதி பெறப்படும் வரை ஏலக்காய் தொழிற்சாலை மூடப்படும் என்று நோட்டீஸ் ஒட்டினர். பின்னர் அதிகாரிகள் தொழிற்சாலையை மூடி சீல் வைத்தனர்.
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறை ஆர்.ஆர்.நகரில் தனியாருக்கு சொந்த மான ஏலக்காய் பதப்படுத்தும் தொழி ற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால், அதனை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த மாதம் ஆர்.ஆர்.நகரை சேர்ந்த கிராம மக்கள், ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் இ.பெரிய சாமியை சந்தித்து கோரிக்கை மனு கொடு த்தனர்.
இதையடுத்து அமைச்சர், இது தொடர்பாக நடவடி க்கை எடுக்க அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கடந்த 3 ஆண்டுகளாக அனுமதி யின்றி ஏலக்காய் பதப்படு த்தும் தொழிற்சாலை செயல்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அந்ததொழிற் சாலையை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அதன்பேரில் ஆத்தூர் தாசில்தார் வடிவேல் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சணா மூர்த்தி, ஏழுமலை, மணலூர் ஊராட்சி மன்ற தலைவர் லதா செல்வகுமார், தாண்டிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி மற்றும் போலீசார் அங்கு சென்று, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன்படி அரசு அனுமதி பெறப்படும் வரை ஏலக்காய் தொழிற்சாலை மூடப்படும் என்று நோட்டீஸ் ஒட்டினர். பின்னர் அதிகாரிகள் தொழிற்சாலையை மூடி சீல் வைத்தனர்.






