search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூய கார்மல்மலை அன்னை"

    • விழா 16-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • 15-ந்தேதி அன்னையின் ஆடம்பர தேர்ப்பவனி நடக்கிறது.

    நித்திரவிளை அருகே உள்ள வாவறை தூய கார்மல் மலை அன்னை ஆலய குடும்ப திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இன்று மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, மாலை 6.30 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடக்கிறது. மாத்திரவிளை வட்டார முதல்வர் மரிய வின்சென்ட் தலைமை தாங்குகிறார். குழித்துறை மறைமாவட்ட முதன்மை செயலாளர் அருட்பணியாளர் ரசல்ராஜ் முன்னிலை வகிக்கிறார். விழா வருகிற 16-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் மாலையில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும்.

    சிறப்பு நிகழ்ச்சிகளாக நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு முதல்திருவிருந்து திருப்பலி முளகுமூடு வட்டார முதல்வர் மரியராஜேந்திரன் தலைமையில் நடக்கிறது. இரவு 7 மணிக்கு மறைகல்வி மன்ற ஆண்டு விழா நடைபெறும்.

    15-ந் தேதி காலை 7.30 மணிக்கு நடைபெறும் திரு முழுக்கு திருப்பலியில் அம்சி பங்குத்தந்தை காட்வின் சவுந்தர் ராஜ் தலைமை தாங்குகிறார். அன்று இரவு 7.15 மணிக்கு அன்னையின் ஆடம்பர தேர்ப்பவனி நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 16-ந் தேதி காலை 8.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை தொடர்ந்து 9 மணிக்கு ஆலய குடும்ப விழா திருப்பலி போன்றவை நடக்கிறது. திருப்பலியில் குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் யேசுரெத்தினம் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் அகஸ்டின் முன்னிலை வகிக்கிறார். பகல் 11 மணிக்கு கொடி இறக்கமும், அன்பின் விருந்தும், மாலை 6.30 மணிக்கு பங்கு அருட்பணி பேரவை ஆண்டு விழா பொதுக்கூட்டமும், கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஆன்றனி சேவியர் தலைமையில் பங்கு அருட்பணி பேரவையினர், விழா குழுவினர், பங்குமக்கள் செய்துள்ளனர்.

    ×