என் மலர்
நீங்கள் தேடியது "துப்புரவு ஊழியர்கள்"
- ஆரம்ப சுகாதார நிலைய ஒப்பந்த சுகாதார துப்புரவு பணியாளர்கள் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் உண்ணாவிரதம் இருந்தனர்.
- போராட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை:
ஆரம்ப சுகாதார நிலைய ஒப்பந்த சுகாதார துப்புரவு பணியாளர்கள் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த போராட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
பணி நிரந்தரம், ஊதிய நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வற்புறுத்தி நடந்த போராட்டத்தின்போது விழுப்புரத்தைச் சேர்ந்த பெண் துப்புரவு பணியாளர் திடீரென மயங்கி விழுந்தார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவரை உடனடியாக 108 ஆம்பூலன்சில் ஏற்றி ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.






