search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீப்பிடித்து எரிந்த கார்"

    • திருப்பூர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 40).
    • அவரது கார் தானாக திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது

    முத்தூர் : 

    திருப்பூர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 40). இவர் நேற்று இரவு காங்கயம், கரூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு திருமண விசேஷத்திற்காக வந்தார். அப்போது மண்டபத்தின் கார் பார்க்கிங்கில் காரை நிறுத்தி விட்டு மண்டபத்திற்கு உள்ளே சென்றுள்ளார். அப்போது அவரது கார் தானாக திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதை பார்த்த அருகில் இருந்தவர் உடனடியாக ரவிச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் காங்கயம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு நிலைய வாகனத்தின் மூலம் தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இருப்பினும் கார் முழுவதும் எரிந்து நாசம் ஆனது. இதுகுறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காரில் இருந்த பேட்டரி கோளாறால் தீப்பிடித்தது தெரியவந்தது. திருமண மண்டப வளாகத்தில் நிறுத்தி இருந்த கார் தானாக தீப்பிடித்து எரிந்ததால் மண்டபத்தில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.

    • காரின் பேனட்டில் இருந்து கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் முன் பகுதி தீப்பிடித்து எரிந்தது.
    • பேட்டரியில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அஞ்சலி பைபாஸ், செட்டிநாயக்கன்பட்டி பிரிவு அருகே தனியார் பழைய கார் விற்பனை நிறுவனம் உள்ளது. இங்கு பழைய கார்களை விற்பனை க்கும் மற்றும் பழுது நீக்கம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலை யில் இன்று காலை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த காரில், பேனட்டில் இருந்து கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் முன் பகுதி தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்த வர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்த னர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்க ப்பட்டது.

    அங்கிருந்த மெக்கானிக் கூறுகையில், பேட்டரியில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டு ள்ளது என்றார். நின்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • உடனடியாக அவரை மீட்ட போலீசார் இதுகுறித்து பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • தீ விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே கார் தீப்பிடித்து எரிவதாக நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ஒரு கார் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

    அதில் இருந்து ஒருவர் தப்பி வெளியே வந்தார். உடனடியாக அவரை மீட்ட போலீசார் இதுகுறித்து பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் திருப்பூரை சேர்ந்த ரிஷிகேஷ் (வயது 23) என்பது தெரியவந்தது. இந்த தீ விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×