search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தி.மு.க. கவுன்சிலர் புகார்"

    • நிகழ்ச்சிக்கு பிறகு பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தின் போது 18-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் இளையராணி அழுது கொண்டே வெளியே ஓடி வந்தார்.
    • எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் எனக்கு அழைப்பு இல்லை. இன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கும் எனக்கு அழைப்பு இல்லை. தி.மு.க. கவுன்சிலரான என்னை பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர் என புகார் அளித்தார்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையில் அமைச்சர் இ.பெரியசாமி ரூ. 17 கோடி மதிப்பில் அம்ருத் 2.0 குடிநீர் திட்டம், ரூ.17 லட்சம் மதிப்பிலான நேரடி கொள்முதல் மையம், நரசிங்கபுரம் பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பில் நாடக மேடை அமைப்பதற்கு பூமி பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சி களில் கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சிக்கு பிறகு பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தின் போது 18-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் இளையராணி அழுது கொண்டே வெளியே ஓடி வந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் எனக்கு அழைப்பு இல்லை. இன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கும் எனக்கு அழைப்பு இல்லை. தி.மு.க. கவுன்சிலரான என்னை பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக என்னுடைய வார்டு பகுதிக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை. எனது வார்டு பகுதியில் திட்டப் பணிகள் தொடர்ந்து புறக்கணிக்க ப்பட்டு வருகிறது. நானும் தி.மு.க. கவுன்சிலர் தான். பேரூராட்சி நிர்வாகம் என்னை புறக்கணித்து அவமானப்படுத்தி வருகின்றனர் என அழுது கொண்ேட வெளியே கோபமாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அமைச்சர் இ.பெரியசாமியை நேரில் சந்தித்து புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

    ×