search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தரை பாலம்"

    • விஜய் வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்
    • இரட்டை ரெயில் பாதை திட்டமும் விரைவில் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

    திருவட்டார் :

    திருவட்டாரில் பரளியாற்றின் குறுக்கே ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலுக்கு செல்வதற்காக பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் தரைமட்டம் பாலம் கட்டபட்டு திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவில் விஜய்வசந்த் எம்.பி. கலந்துகொண்டு பாலத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் திரு வட்டார் ஆதிகேசவ பெரு மாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஆறாட்டுக்கு செல்வதற்காக பரளியாற்றின் குறுக்கே தரைமட்டபாலம் கட்ட வேண்டுமென பொதுமக்கள் எனது தந்தை வசந்தகுமார் எம்.பி.யாக இருக்கும்போது கோரிக்கை வைத்தனர். அதை நிறைவேற்றி வைப்ப தில் மகிழ்ச்சியடைகிறேன்.

    ரூ.48 ஆயிரம் கோடி திட்டங்கள் முன்னாள் எம்.பி. கொண்டு வந்துள்ளதாகவும், நான் ரூ.28 ஆயிரம் கோடி திட்டங்களே செய்துள்ளதாகவும் கூறி வருகிறார்கள். அவர்கள் செய்துள்ள வளர்ச்சி திட்டங்கள் குறித்து விபரம் தந்தால் அதற்குரிய விளக்கம்தர நான் தயாராக உள்ளேன் என கூறியும் இதுவரை பா.ஜ.க.வினர் விளக்கம் தரவில்லை.

    நான்கு வழிச்சாலை திட்டத்தை முடக்கியது குறித்து மத்திய மந்திரி மற்றும் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்தி ருந்தோம். தங்களுக்கு வாக்களிக்கவில்லை, தங்கள் வேட்பாளருக்கு வாக்களிக்க வில்லை என்ற கார ணத்தோடு குமரி மாவட்ட மக்களை புறக்கணித்து வளர்ச்சி திட்டங்களை முடக்குவதும் காலதா மதப்படுத்துவதும் பழக்கமாக கொண்டுள்ளனர். எனினும் தற்போது மீண்டும் நான்கு வழிச்சாலை பணிகள் தொடங்க உள்ளது.

    இரட்டை ரெயில் பாதை திட்டமும் விரைவில் நிறைவடையும் தருவாயில் உள்ளது. நான்கு வழிசாலை திட்டத்திற்கு மண் தட்டுபாடு இருந்ததால் பணிகள் நிறுத்த பட்டிருந்தது. தற்போது தமிழக முதல்-அமைச்சரின் ஆலோசனைபடி திரு நெல்வேலியில் இருந்து மண் கொண்டுவர அனுமதிய ளித்துள்ளதையடுத்து பணி கள் வேகமடைந்து வருகிறது. விரைவில் நான்கு வழிச்சாலை பணிகள் நிறை வடையும்.

    பாராளுமன்ற கட்டிட பணிகள் முழுமையாக நிறை வடையாமலும் வரலாற்றை மாற்றவேண்டும் என எண்ணதோடு பிரதமர் மோடி அவசரமாக திறந்து வைத்தார். முடியாத பாலங்களை பிரதமர் திறந்து வைப்பதும் பின்னர் வேலை களை நிறைவடைந்து மீண்டும் திறப்பதும் தொடர் கதையாகி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வட்டார தலைவர் வக்கீல் ஜெபா தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர் பினுலால் சிங், அகில இந்தியா காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் செலின்மேரி, மாவட்ட செயலாளர் ஆற்றூர்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் ஜாண் இக்னேசியஸ், முன்னாள் வட்டார தலைவர் ஜெகன்ராஜ், ஆற்றூர் நகர தலைவர் ஜான்வெர்ஜின், கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜோன், வேர்கிளம்பி பேரூராட்சி மன்ற தலைவர் சுஜிர் ஜெயகுமார்சிங், குமாரபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ஜாண் கிறிஸ்டோபர்சிங், காட்டாத்துறை ஊராட்சி மன்ற தலைவர் இசையாஸ், வட்டார நிர்வாகிகள் வக்கீல் ராஜேஷ், ராஜதாஸ் ஊராட்சி மன்ற தலைவர் அச்சுதன், அகஸ்டின் ஜிஜோ மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    ×