search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தம்பி சிகிச்சை"

    அமெரிக்காவில் 9 வயது சிறுவன், தன் தம்பியின் மருத்துவச் செலவுக்காக ஜூஸ் மற்றும் டிஷர்ட் விற்பனை செய்து 4 லட்சம் ரூபாய் திரட்டியது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கலிபோர்னியா:

    கலிபோர்னியாவின் கிரீன்வுட் பகுதியைச் சேர்ந்த மெலிஸ்சா-மேட் தம்பதியருக்கு 9 வயதில் ஆண்ட்ரூ மெரி என்ற மகன் இருக்கிறான். சமீபத்தில் இந்த தம்பதியருக்கு இரண்டாவது ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், பிறந்தது முதலே அரிய வகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் குழந்தையை பிட்ஸ்பர்க் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.


    சிகிச்சைகான மருத்துவ பில்லை கட்ட முடியாமல் பெற்றோர் மிகவும் சிரமப்பட்ட வேளையில், தம்பியின் மருத்துவ செலவுக்காக தானே பணம் திரட்ட முடிவு செய்தான் ஆண்ட்ரூ.


    இதற்காக வித்தியாசமாக முயற்சி செய்த ஆண்ட்ரூ, எலுமிச்சம்பழ ஜூஸ் தயாரித்து அதை உள்ளூர் நெடுஞ்சாலையோரம் விற்பனை செய்தான். அத்துடன் தன் தம்பியின் பெயர் அச்சிடப்பட்ட டிஷர்ட்டுகளையும் விற்பனை செய்தான்.  ஆண்ட்ரூவின் இந்த முயற்சிக்கு குடும்பத்தினர் அனைவரும் உதவி செய்தனர். இதன்மூலம் 2 மணி நேரத்தில் கிட்டத்தட்ட ரூ.4 லட்சம் பணம் திரட்டினான் ஆண்ட்ரூ. அதை அவனது தம்பியின் மருத்துவ செலவுக்கு பயன்படுத்தினான். அவனது பாசம் மிகவும் பாராட்டுக்குரியது என அனைவரும் வியந்தனர். #LemonadeStand #FundRaiseForBrother #PrayForDylan
    ×