search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டை போட்டி"

    இந்தியாவிற்கு எதிராக 6 மணி நேரம் போராடியும் வெற்றி கிடைக்கவில்லை என்று ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் மகமது ஷேசாத் தெரிவித்துள்ளார். #AsiaCup2018
    ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் நேற்று துபாயில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் சேர்த்தது. ஆப்கானிஸ்தான் ஸ்கோர் 250-ஐ தாண்ட விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன முகமது ஷேசாத் முக்கிய காரணமாக இருந்தார். அவர் 116 பந்தில் 11 பவுண்டரி, 7 சிக்சருடன் 124 ரன்கள் குவித்தார்.

    இந்திய அணி 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. ஆனால் 252 ரன்னில் ஆல்அவுட் ஆனது போட்டி ‘டை’யில் முடிந்தது.

    சதம் அடித்த ஷேசாத் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். சதம் அடித்தும் போட்டியில் முடிவு கிடைக்காதது ஷேசாத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



    இதுகுறித்து முகமது ஷேசாத் கூறுகையில் ‘‘இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி முடிவு எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. கடுமையான வெப்பம், 6 மணி நேரம் கஷ்டப்பட்டு மைதானத்தில் விளையாடியுள்ளோம். இந்த முடிவு ஏற்றுக் கொள்ளதக்கதல்ல.

    இது எங்களுக்கு கடைசி போட்டி என்பதால் ஒவ்வொரு பந்தையும் விளாச முடிவு செய்தேன். அதனால் பந்தை பார்த்ததும் விளாசினேன். ஆசியாவில் உள்ள சில சிறந்த அணிகளுக்கு எதிராக விளையாடியதை பெருமையான கருதுகிறேன்’’ என்றார்.
    ×