search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரைவரும் சாவு"

    • கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் வேகமாக மோதியது.
    • டிரைவர் விக்கி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

    கடலூர்:

    வேலூர் மாவட்டம் திருப்ப த்தூர் ஆதியூரை சேர்ந்தவர் பழனிவேல். இவர் மனைவி பரிமளா (வயது 40), மகன் தருண்ராஜ் (19). உடன் தனது காரில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நேற்று முன்தினம் சென்றார். காரை டிரைவர் விக்கி ஓட்டினார். நேற்று அதிகாலை 3 மணியளவில் கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த வண்டு ராயன்பட்டு அருகே கார் வந்தது. அப்போது கார் டிரை வரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் பழனிவேலின் மனைவி பரிமளா, மகன் தருண்ராஜ் ஆகியோர் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தனர். அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அங்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து புவனகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் புவனகிரி போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்த பழனிவேலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்ட விக்கியை சேத்தியாத்தோப்பு தீயணைப்பு வீரர்கள் மூலம் பத்திரமாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. விபத்தில் உயிரிழந்த பரிமளா, அவரது மகன் தருண்ராஜ் ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் விபத்தில் படுகாயம் அடைந்த டிரைவர் விக்கிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். தீவிர சிகிச்சையில் இருந்து வந்த பழனிவேலை அவரது உறவினர்கள் மேல்சிகி ச்சைக்காக பங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கார் விபத்தில் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 2 லிருந்து 3 ஆக உயர்ந்தது சோகத்தை ஏற்படுத்துகிறது.

    ×