search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டவுன் பஸ்களில் நூதன ஏற்பாடு"

    • காலை மற்றும் மாலை நேரங்களில் கிராமங்களுக்கு போதிய அளவு பஸ் சேவை இல்லாததால் முண்டியடித்துக்கொண்டு கூட்ட நெரிசலில் செல்லும் நிலை உள்ளது.
    • ஏணிகளில் ஏற முடியாதபடி இரும்பு தகடுகளால் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆபத்தான பயணத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என பஸ் உரிமையாளர்கள் நம்புகின்றனர்

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகரைச்சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். பெரும்பாலான அரசு பள்ளி மாணவர்கள் டவுன் பஸ்களில் செல்கின்றனர்.

    காலை மற்றும் மாலை நேரங்களில் கிராமங்களுக்கு போதிய அளவு பஸ் சேவை இல்லாததால் முண்டியடித்துக்கொண்டு கூட்ட நெரிசலில் செல்லும் நிலை உள்ளது. இதில் ஒருபடி மேலே போய் பல மாணவர்கள் ஆபத்தான முறையில் படிகளில் தொங்கி பயணம் செய்கின்றனர். குக்கிராமங்களுக்கு செல்லும் டவுன் பஸ்களில் பின்பக்க ஏணிகள் மற்றும் பஸ்களின் மேற்புறத்தில் பயணிக்கின்றனர்.

    இதுகுறித்து பலமுறை போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் ஆபத்தான பயணங்கள் தொடர்ந்து வருகிறது. டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் மாணவர்களை கண்டித்தால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சிைன தொடர்ந்து வருகிறது. எனவே இதனை தடுக்கும் விதமாக திண்டுக்கல் பகுதியில் உள்ள பஸ்களில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி ஏணிகளில் ஏற முடியாதபடி இரும்பு தகடுகளால் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆபத்தான பயணத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என பஸ் உரிமையாளர்கள் நம்புகின்றனர். இருந்தபோதும் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் இடையே விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே விபத்தை தடுக்க முடியும் என சமூகஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×