என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜான்மோசஸ் நினைவு நாள்"

    • மதுரையில் ஜான்மோசஸ் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
    • சின்மயா பைனான்ஸ் நிறுவன தலைமை நிர்வாகிகள் பாக்யராஜ், குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை ஆரப்பாளை யத்தில் முன்னாள் மத சார்பற்ற ஜனதா தளம் பிரமுகர் ஜான்மோசஸ் நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது.

    மதசார்பற்ற ஜனதாதளம் செயலாளர் செல்லப்பாண்டி தலைமை வகித்தார். ஆசிரியர் லூர்து மேரி ஜான் மோசஸ், ஜான்நோயல் ராஜா, ஜான் மணி பாரத், இனியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் கிரம்மர் சுரேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், முன்னாள் துணை மேயர் மன்னன், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராம், காங்கிரஸ் நிர்வாகி காந்தி, சமூக நீதி கட்சி மாநில தலைவர் பால்ராஜ், மதுரை மாநகர் காங்கிரஸ் தலைவர் கார்த்தி கேயன், காங்கிரஸ் தலைவர் சிதம்பர பாரதி, தி.மு.க தலைமைக்கழக பேச்சாளர் மார்சல் முருகன்,

    சமூக நீதி கட்சி தலைவர் கூடலிங்கம், வி.சி.க. மாலின், தமிழர் தேசிய முன்னணி தலைவர் கணேசன், கவிஞர்கள் ெபாற்கை பாண்டியன், ரேவதி அழகர் சாமி, பொயட் ரவி, சேகர் மருது, ஈஸ்வரராஜா, துளிர், மதசார்பற்ற ஜனதாதளம் லிங்கம், ஜெயப்பிரகாசம், அவனி மாடசாமி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பேசினர்.

    ஜான்மோசஸ் அறக்கட் டளை சார்பில் கிருஷ்ணா புரம் காலனி மாநகராட்சி பள்ளிக்கு எல்.இ.டி டி.வி. வழங்கப்பட்டது. மேலும் பள்ளி மாணவ- மாணவி களுக்கு கல்வி ஊக்கதொகை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் முத்துசாமி, நாராயணன், ரவீந்திரன், ஜெயம் பாண்டியன், புதூர் சுகுமாரன், ரங்கராஜன், மற்றும் சின்மயா பைனான்ஸ் நிறுவன தலைமை நிர்வாகிகள் பாக்யராஜ், குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×