search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேப்பாக் சூப்பர் கில்லிஸ்"

    திருநெல்வேலியில் நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு எதிரான ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #TNPL2018 #ChepaukSuperGillies #SiechemMaduraiPanthers
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 3-வது சீசன் கடந்த 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலியில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. மதுரை பாந்தர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அருண் கார்த்திக், ரோகித் ஆகியோர் இறங்கினர். அவர்கள் இருவரும் விரைவில் அவுட்டாகினர்.

    மதுரை அணியில் ஷிஜித் சந்திரன், ஜகதீசன் கவுசிக் ஆகியோர் ஓரளவு விளையாடி தலா 37 ரன்கள் எடுத்தனர். நில்ஷ் சுப்ரமணியன் 31 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது.



    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சார்பில் முருகன் அஷ்வின், சன்னி குமார் சிங் ஆகியோர் 3 விக்கெட்டும், சித்தார்த் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    இதையடுத்து, 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கோபிநாத், கங்கா ஸ்ரீதர் ராஜு ஆகியோர் இறங்கினர்.

    கோபிநாத் 8 ரன்னிலும், ராஜு 24 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய சசிதேவ், பாஸ்கரன் ராகுல் ஆகியோரும் விரைவில் அவுட்டாகினர். இதனால் சேப்பாக் அணி 12 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்திருந்தது. சற்று பொறுப்புடன் ஆடிய கார்த்திக் 28 ரன்களில் அவுட்டாகினர். 14 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்துள்ளது.



    இறுதியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 127 ரன்கள்  மட்டுமே எடுத்தது. இதயடுத்து, மதுரை பாந்தர்ஸ் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மதுரை அணி சார்பில் ரஹில் ஷா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் 3 விக்கெட்டும், கிரண் ஆகாஷ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். போட்டியின் இடையில் பலத்த காற்று வீசியதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 3-வது சீசன் ஜூலை மாதம் 11-ந்தேதி தொடங்கும் என்றும், வீரர்கள் ஏலம் 31-ல் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளன. #TNPL
    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கடந்த 2016-ம் ஆண்டு தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரை அறிமுகப்படுத்தியது. இதை ஸ்டார் கிரிக்கெட் ஒளிப்பரப்பு செய்தது. தமிழ்நாடு வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த லீக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 2016 மற்றும் 2017-ல் வெற்றிகரமாக லீக் நடைபெற்றது. 2016-ல் தூத்துக்குடி அணியும், 2017-ல் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியும் கோப்பையை கைப்பற்றியது.

    இந்த இரண்டு வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் பங்கேற்காததால், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இந்த தொடரை நடத்தியது என்று பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் ஜூலை 11-ந்தேதி 3-வது சீசன் தொடங்கும் என தமிழ்நாடு பிரீமியர் லீக் அதிகாரி தெரிவித்ததாக ஆங்கில இணைய தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.



    மேலும் அந்த செய்தியில் தமிழ்நாடு பிரீமியர் லீக் வீரர்களுக்கான ஏலம் மே 31-ந்தேதி, சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெறும் எனவும், 794 வீரர்கள் பதிவு செய்துள்ளதாகவும், தொடருக்கான முழுஅட்டவணையை தயாரிப்பதற்காக போட்டியை ஒளிபரப்பும் நிறுவனத்துடன் பேசிக் கொண்டிருப்பதாவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஏலத்தில் பங்கேற்கும் அணிகள் தேசிய அணிக்காக விளையாடிய எந்தவொரு வீரர்களையும் (Capped Players) தக்கவைக்க முடியாது என்றும், முதல் இரண்டு சுற்றில் எந்தவொரு வீரரையும் ஏலம் எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×