search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன்கள் பறிப்பு"

    ஈரோடு பகுதிகளில் செல்போன்களை பறித்த சிறுவர்கள் 6 பேரை போலீசார் கைது செய்து கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதியில் சமீப காலமாக செல்போன் பறிக்கும் சம்பவம் அதிகளவு நடந்து வந்தது. குறிப்பாக இரவு நேரங்களில் செல்போன் பேசியபடி தனியாக நடந்து செல்லும் நபர்களை குறிவைத்து இந்த வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தன.

    வெண்டிபாளையம் சூரம்பட்டி போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் வரும் மர்ம கும்பல் செல்போன் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தன. இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு டவுன் போலீசார் வெண்டிப்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக சுற்றித்திரிந்த 6 சிறுவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த சிறுவர்கள் 6 பேரும் ஈரோட்டில் பல்வேறு பகுதியில் செல்போன் திருட்டு செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

    6 சிறுவர்களும் குறிப்பிட்ட பகுதிகளை நோட்டமிட்டு தனியாக வருபவர்களிடம் செல்போன்களை அபேஸ் செய்து தப்பி விடுகின்றனர்.அவர்களிடமிருந்து சில செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவர்கள் 6 பேரையும் கைது செய்து கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

    வத்தலக்குண்டுவில் அடுத்தடுத்து 2 வாலிபர்களிடம் செல்போன்களை பறித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு கே.கே.நகரைச் சேர்ந்தவர் மதன் (வயது 20). கல்லூரி மாணவர். நேற்று இரவு தனது வீட்டில் இருந்து பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஆட்டோ ஸ்டாண்டு அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரது முதுகை தட்டினர். இதில் மதன் கையில் வைத்திருந்த செல்போன் கீழே விழுந்தது.

    உடனே அவர்கள் செல்போனை தூக்கிக் கொண்டு சென்று விட்டனர். இது குறித்து வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வத்தலக்குண்டு வேட்டுவர் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 23). இவர் திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டுக்கு பஸ்சில் வந்து கொண்டு இருந்தார். காளியம்மன் கோவில் அருகே இறங்கியதும் உடன் வந்த ஒருவர் தனக்கு பல்வேறு அதிகாரிகளை தெரியும் என்றும் அவர்களைக் கொண்டு வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.

    மேலும் அவரது செல்போனை வாங்கி தனது எண்ணை பதிவு செய்து கொள்ளும்படி கூறிக் கொண்டே அதனை பறித்துக் கொண்டு ஓடி விட்டார். இது குறித்தும் வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #Tamilnews

    ×