search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்போன் திருட்டு பிரச்சினை"

    கரூர் அருகே செல்போன் திருட்டு பிரச்சினையில் தொழிலாளி தலையில் கல்லை போட்டு படுகொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பஞ்சயம் கோட்டை பகுதியில் கல் குவாரி உள்ளது. இங்கு நெல்லை மாவட்டம் சுந்தரேசபுரம் வடக்கு தெருவை சேர்ந்த இசக்கிபாண்டியன் (வயது 65) என்பவர் கல் உடைக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே குவாரியில் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பெருமாள்மலை அடி வாரத்தை சேர்ந்த செல்வராஜ் (32) என்பவரும் கல் உடைக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

    இதற்கிடையே 2 பேரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் உள்ள கல்குவாரியில் வேலை பார்த்து வந்தனர். அப்போது இசக்கிபாண்டியனின் செல்போனை செல்வராஜ் திருடியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

    தற்போது கரூர் மாவட்டம் பஞ்சயம் கோட்டை கல்குவாரியில் பணியாற்றி வந்த போது, செல்வராஜ் தனது செல்போனை திருடியது தொடர்பாக இசக்கிப்பாண்டியன் சக தொழிலாளர்களிடம் கூறி வந்துள்ளார். இதனால் அவமானமடைந்த செல்வராஜ், இசக்கி பாண்டியனிடம் என்னை பற்றி அவதூறு பரப்புவதை நிறுத்துமாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்றிரவு மது அருந்தி விட்டு வந்த செல்வராஜ், இசக்கிபாண்டியன் தங்கியிருந்த குடிசைக்கு சென்று அவருடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ், அருகில் கிடந்த பெரிய பாறாங்கல்லை எடுத்து இசக்கிபாண்டியனின் தலையில் போட்டார். இதில் தலை நசுங்கி இசக்கிப்பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் வேலாயுதம்பா ளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் இசக்கிப்பாண்டியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கொலையாளி செல்வராஜை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×