என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை மருத்துவக் கல்லூரி"

    • அரசு மரியாதையுடன் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
    • சென்னை மருத்துவக் கல்லூரியில் உடல் ஒப்படைக்கப்பட்டது

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான நல்லகண்ணு வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக் குறைவுகளுக்கு சிகிச்சை பெற்றுவந்தநிலையில் நேற்று உயிரிழந்தார். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று பிற்பகல் 1:55 மணிக்கு உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து அவரது உடல் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

    அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், நடிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இன்றுகாலை வரை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது. 

    இந்நிலையில் பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு, அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் குடும்பத்தினர் அவரது உடலை முறைப்படி சென்னை மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம், மருத்துவ மாணவர்களின் கல்விக்காக ஒப்படைத்தனர். 


    • நல்லக்கண்ணுவிற்கு வயது 101
    • கட்சி அலுவலகத்தில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் நல்லக்கண்ணு இன்று காலமானார். வயதுமூப்பு காரணமாக எழுந்த உடல்நலக் கோளாறுகளால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கடந்த 20க்கும் நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்தநிலையில், இன்று 1.55 மணியளவில் காலமானார்.

    இவரது மறைவு தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள், கட்சியினர் என அனைத்து தரப்பு மக்களும் தங்கள் இரங்கல்களை பதிவுசெய்து வருகின்றனர்.

    தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இறுதி மரியாதைக்காக கொண்டு செல்லப்பட உள்ளது. கட்சியினர், பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்த பொதுப்பார்வையில் வைக்கப்படுகிறது.

    இதனைத்தொடர்ந்து அவரது உடல் அவரது விருப்பப்படியே மருத்துவ மாணவர்களின் ஆய்வுகளுக்காக நாளை சென்னை மருத்துவக் கல்லூரியில் ஒப்படைக்கப்பட உள்ளது.  

    ×