என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா பயணிகள் வருகை குறைவு"

    • வழக்கமாக ஞாயிற்றுகிழமைகளில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். தற்போது மழை பெய்து மரங்கள் சாலையில் முறிந்து விழுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது.
    • கடந்த 2 நாட்களாக கொடைக்கானல் நகர், கிராம பகுதிகளில் ஆய்வு செய்து குடிநீர் பாட்டில்கள் 1, 2 லிட்டர்களில் விற்பனை செய்யக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    கொடைக்கானல்:

    தமிழகத்தில் மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் பெய்த தொடர்மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. மேலும் மின் கம்பங்களும் ஒடிந்ததால் மலைக்கிராமங்கள் இருளில் மூழ்கியது. சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். அங்கு முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணி நடைபெற்றது.

    மேலும் மின் ஊழியர்கள் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர் மழையால் கொடைக்கானலில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்போது புயல் கரையைக் கடந்த நிலையில் மழை குறைந்துள்ளது.

    வழக்கமாக ஞாயிற்றுகிழமைகளில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். தற்போது மழை பெய்து மரங்கள் சாலையில் முறிந்து விழுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. வந்திருந்த பயணிகளும் நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை மட்டும் கண்டு ரசித்தனர்.

    மேலும் கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்தனர். இதனால் சாலைகள் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்பட்டது.

    கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருவதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டு அட்வகேட் கமிஷனர் முகமது முகைதீன் தலைமையில் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். கடந்த 2 நாட்களாக கொடைக்கானல் நகர், கிராம பகுதிகளில் ஆய்வு செய்து குடிநீர் பாட்டில்கள் 1, 2 லிட்டர்களில் விற்பனை செய்யக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், உள்ளாட்சி நிர்வாகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதாக ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பொது தேர்வால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு
    • வியாபாரிகள், விவசாயிகள் வருமானமின்றி சிரமம்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. ஏலகிரி மலை 14 கிராமங்கள் கொண்டு நான்குபுறமும் மலைகளால் சூழப்பட்டு பசுமையாக காணப்படுகிறது.

    இது பெங்களூர், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தின் அருகில் ஏலகிரி மலை அமைந்துள்ளது. 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து செல்ல வேண்டும்.

    இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, சாகச விளையாட்டுகள், செல்ஃபி பார்க், பறவைகள் சரணாலயம், சுவாமிமலை ஏற்றம், தாமரைக் குளம், ஸ்ரீ கதவ நாச்சியம்மன், நிலாவூர் ஏரி, ஆகியவை ஏலகிரி மலையில் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது.

    இந்நிலையில் கோடைக்கால துவங்கும் நிலையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொது தேர்வு நடைப்பெற்று கொண்டு இருக்கும் நிலையிலும் மேலும் மழையின் காரணமாக ஏலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகள் வரத்து மிகவும் குறைவாக இருந்தது.

    இதனால் வார விடுமுறையான நேற்று மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. ஏலகிரி மலையில் விவசாயிகளும், வியாபாரிகளும் வருமானமின்றி சிரமத்திற்குள்ளாகினர்.

    ×