search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா துறை"

    • நாளை திருவாரூரில் கலைஞர் கோட்டகம் திறப்பு விழா நடைபெற உள்ளது.
    • தஞ்சை பெரிய கோவிலை உலக அதிசய பட்டியலில் இடம் பெற செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருங்காட்சியகத்தை இன்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    நாளை திருவாரூரில் கலைஞர் கோட்டகம் திறப்பு விழா நடைபெற உள்ளது. இதில் அனைத்து துறை அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இந்தியாவிலேயே நம்பர் ஒன் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் விளங்கி வருகிறார்.

    இந்தியாவிலேயே சுற்றுலா துறையில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இதேபோல் உலக அளவில் விளையாட்டு துறையை முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு ஓயாமல் உழைத்து வருகிறார். இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் சிறந்த மருத்துவம் கிடைக்கிறது. அதுவும் மிகக் குறைந்த விலையில் உயர்தர மருத்துவம் கிடைக்கிறது.

    தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் பண்டைய கால தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. வருங்கால சந்ததியருக்கு மிகவும் பயனுள்ளதாக அருங்காட்சியகம் உள்ளது.

    தஞ்சை பெரிய கோவிலில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு விடுதி கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சாவூருக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இந்த ஆண்டு இறுதிக்குள் 1 கோடிக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தஞ்சை பெரிய கோவிலை உலக அதிசய பட்டியலில் இடம் பெற செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சிவகங்கை பூங்கா இன்னும் இரண்டு மாதத்தில் திறக்கப்பட உள்ளது.

    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் ஆய்வு செய்து சுற்றுலா துறைக்கு என்ன தேவைகள் என்பது குறித்து ஆய்வு நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×