search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு அபிஷேகம்"

    • காரைக்கால் அக்கரைவட்டம் சித்தர் சித்தானந்த சாமிகளின் 108-வது மகா குருபூஜை விழா நடைபெற்றது.
    • அக்கரைவட்டத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவரின் அழைப்பை ஏற்று காரைக்கால் சென்று பல அற்புதங்களை செய்தவர்.

    புதுச்சேரி:

    18-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் சித்தர் சித்தானந்த சுவாமிகள். சிவபெருமானின் அருள்பெற்று பல்வேறு சித்து வேலைகள் மூலம் பல்வேறு நோய்களை, பிரச்சினைகளை தீர்த்து வைத்ததால், அப்பகுதி மக்களால் பெரும் வரவேற்பை பெற்றவர். நாகை மாவட்டம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு இவர் வந்தபோது, காரைக்கால் அக்கரைவட்டத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவரின் அழைப்பை ஏற்று காரைக்கால் சென்று பல அற்புதங்களை செய்தவர். தொடர்ந்து, அக்கரைவட்டம் சௌந்தரியவல்லி சமேத சோமநாதர் கோவிலுக்கு சொந்தமான மாமரத்தின் கீழ் 30.8.1914-ம் ஆண்டு முக்கிதியடைந்தார்.

    இவரது சமாதியின் கீழ் மக்கள் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் மகா குருபூஜை நடத்துவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பூஜை நேற்று (5-ந் தேதி) நடந்த குருபூஜையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர், சித்தர் சமாதிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து வழிப்பட்டனர். தொடர்ந்து, அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை சோமநாதர் சுவாமி தேவஸ்தான அறங்காவல் வாரியத்தினர், அக்கரைவட்டம் திருமூலர் திருமுறை மன்றத்தினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.

    ×