search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாந்தி பூஷன்"

    • முன்னாள் சட்டத்துறை மந்திரி சாந்தி பூஷன் காலமானார்.
    • சாந்தி பூஷன் மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    புதுடெல்லி:

    மூத்த வழக்கறிஞரும், முன்னாள் சட்டத்துறை மந்திரியுமான சாந்தி பூஷன் (97), நேற்று காலமானார். மொரார்ஜி தேசாய் அரசில் 1977 முதல் 1979 வரை சட்ட மந்திரியாக பணியாற்றினார். அவரது மகன் பிரசாந்த் பூஷன் ஒரு வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலராக உள்ளார்.

    ராம் மனோகர் லோஹியாவின் எஸ்எஸ்பியின் தலைவரான ராஜ் நாராயணன், ரேபரேலி மக்களவைத் தொகுதியில் இந்திரா காந்தியிடம் தோல்வி அடைந்தார். அதைத் தொடர்ந்து ஊழல் தேர்தல் நடைமுறைகளை மேற்கோள் காட்டி இந்திரா காந்தியின் தேர்தலை ரத்து செய்ய மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் சாந்தி பூஷன் வக்கீலாக இருந்தார். அலகாபாத் ஐகோர்ட்டில் ராஜ் நாராயணன் சார்பில் சாந்தி பூஷன் ஆஜரானார் , இதன் விளைவாக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

    சாந்தி பூஷனின் மறைவுக்கு தலைவர்கள் பலர் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சாந்தி பூஷன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சட்டத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காகவும், தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பேசுவதில் உள்ள ஆர்வத்திற்காகவும் ஸ்ரீ சாந்தி பூஷன் ஜி நினைவு கூரப்படுவார். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு இரங்கல். ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.

    ×