search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தோஷ் பிரதாப்"

    • அருள்நிதி தற்போது நடித்துள்ள திரைப்படம் 'கழுவேத்தி மூர்க்கன்'.
    • இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கழுவேத்தி மூர்க்கன்'. இப்படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். இதில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் நாளை (மே 26) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    கழுவேத்தி மூர்க்கன்

    'கழுவேத்தி மூர்க்கன்' படத்தின் போஸ்டர்கள், டீசர், பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. இந்நிலையில், கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் குறித்து நடிகர் சந்தோஷ் பிரதாப் கூறியதாவது, 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படம் எனக்கு முக்கியமான திரைப்படம். ஆனால், ரசிகர்களை பொறுத்த வரை படத்தை எப்படி வரவேற்பார்கள் என்று தெரியாது.


    கழுவேத்தி மூர்க்கன்

    'பத்து தல' படத்தில் ஏன் நடித்தோம் என்ற சின்ன பயம் இருந்தது. ஆனால், மக்கள் அதை பாராட்டினார்கள். நான் வீட்டில் கூட சொல்லவில்லை அப்படி ஒரு படம் நடித்தேன் என்று. 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படம் பார்த்து விட்டு தயாரிப்பாளர்கள் பலர் என் கதாபாத்திரம் நன்றாக இருப்பதாக பாராட்டினார்கள் என்று கூறினார்.

    • இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டியர் டெத்’.
    • இந்த படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    எஸ்.என். ஆர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டியர் டெத்'.சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் எழுதியுள்ளார். பிரேம்குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு நவீன் அண்ணாமலை இசையமைத்துள்ளார்.


    டியர் டெத்

    இறப்பு என்பது நெகட்டிவ் ஆகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால் சாவு என்பது பயப்படுத்தக்கூடியதாக இருந்தாலும் அது கம்பீரமானது. இறப்பு ஒரு மனிதனாக நம்மிடம் பேசினால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த படம் குறித்து கதாசிரியர் ஸ்ரீதர் வெங்கடேசன் கூறும்போது, "உண்மை சம்பவங்களையும் கொஞ்சம் கற்பனையையும் கலந்து இந்தப்படத்தை உருவாக்கியுளோம். இந்த படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் படத்திலுள்ள கதாபாத்திரங்களுடன் ஏதோ ஒரு விதத்தில் தங்களை பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும்.


    டியர் டெத்

    இதுவரை இங்கே இறப்பு என்கிற விஷயத்தைப் பற்றி பேசும்போது எமன் என்கிற ஒரு கதாபாத்திரம் மூலமாகவே பேசியிருக்கிறார்கள். முதன்முறையாக இறப்பே ஒரு கதாபாத்திரமாக மனித உருவில் மாறி பேசினால் எப்படி இருக்கும் என்கிற புதிய முயற்சிதான் இந்த படம். இந்த படத்தில் காதல், அம்மா, குழந்தை, நட்பு என நான்கு கதைகள் இடம்பெற்றுள்ளன. இந்த நான்கு கதைகளுடன் இறப்பு எப்படி தொடர்புபடுத்தப்படுகிறது என்பதை ஹைபர்லிங்க் முறையில் கூறியுள்ளோம்" என்று கூறினார்.

    இந்தப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களுக்கு ஏற்கனவே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சென்சாரில் 'யு' சான்றிதழ் பெற்றுள்ள இந்தப்படம் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×