search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்க குழு கூட்டம்"

    • குறைந்தபட்சம் மாத ஊதியம் ரூ 21 ஆயிரம் வழங்க வேண்டும்.
    • உழைக்கும் தொழிலாளர்களின் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தியதை தமிழ்நாடு அரசு திரும்பபெற வேண்டும்

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட ஏஐடியூசி ஆஷா பணியாளர் சங்கத்தின் மாவட்டக்குழு கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மேனகா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தீபா வரவேற்றார். மாவட்ட பொருளாளர் ருக்மணி, மாவட்ட துணை தலைவர் உத்ரா, மாவட்ட துணை செயலாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஏஐடியூசி மாநில துணை தலைவர் மணி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தேவராசன், உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மனோகரன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

    கூட்டத்தில் ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் மே 1-ந் தேதி தருமபுரியில் நடக்கும் மே தின பேரணி மற்றும் பொது கூட்டத்தில் திரளாக பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

    மேலும் அனைத்து ஆஷா (கிராம செவிலியர்களின் உதவியாளர்கள்) பணியாளர்களையும் தமிழ்நாடு அரசு நிரந்தரப்படுத்த வேண்டும்.

    குறைந்தபட்சம் மாத ஊதியம் ரூ 21 ஆயிரம் வழங்க வேண்டும். உழைக்கும் தொழிலாளர்களின் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தியதை தமிழ்நாடு அரசு திரும்பபெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் நிர்வாகிகள் ராதா, செல்லம்மாள், மகேஷ்வரி, சம்பு, கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தின் முடிவில் நிர்வாகி கிருஷ்ணம்மாள் நன்றி கூறினார்.

    ×