search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை தொழில் அதிபர்"

    • தொழில் அதிபருடன் தங்கியிருந்த பெண்ணுக்கும், மிரட்டிய கும்பலுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
    • அந்த பெண்ணும், மிரட்டிய கும்பலும் சேர்ந்தே ஓட்டலுக்கு வருகிறார்கள். முதலில் அந்த பெண் ஓட்டல் அறைக்கு செல்கிறார்.

    கோவை:

    கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்த 63 வயது தொழில் அதிபர். கடந்த 11-ந்தேதி காந்திபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார்.

    அப்போது அவரை சந்திக்க 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் வந்தார். தொழில் அதிபரும், அந்த இளம்பெண்ணும் தனிமையில் இருந்தனர். அப்போது திடீரென 3 பேர் கும்பல் அந்த அறைக்குள் நுழைந்தனர்.

    அவர்கள் தொழில்அதிபரை மிரட்டினர். ஓட்டலுக்கு பெண்ணை வரவழைத்து ஜாலியாக இருக்கிறாயா, உன்னை அசிங்கப்படுத்தாமல் விடமாட்டோம் என்றனர். பின்னர் அந்த பெண்ணையும், தொழில் அதிபரையும் நிர்வாணமாக்கி புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.

    அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பாமல் இருக்க வேண்டும் என்றால் உடனடியாக ரூ.5 லட்சம் வேண்டும் என மிரட்டினர். தொழில் அதிபர் பணம் இல்லை என மறுக்கவே, அவரிடம் இருந்த ரூ.1000 மற்றும் ஏ.டி.எம். கார்டை பறித்துக் கொண்டு அவர்கள் தப்பிச் சென்றனர்.

    இதுபற்றி தொழில் அதிபர் காட்டூர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் தொழில் அதிபர் தங்கியிருந்த ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில் தொழில் அதிபருடன் தங்கியிருந்த பெண்ணுக்கும், மிரட்டிய கும்பலுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அந்த பெண்ணும், மிரட்டிய கும்பலும் சேர்ந்தே ஓட்டலுக்கு வருகிறார்கள். முதலில் அந்த பெண் ஓட்டல் அறைக்கு செல்கிறார். சிறிது நேரம் கழித்து தான் அந்த கும்பல் ஓட்டல் அறைக்குள் நுழைகிறது. இதனால் அந்த கும்பல் திட்டமிட்டே தொழில் அதிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்றது அம்பலமாகி உள்ளது.

    அந்த பெண் ஓட்டலுக்குள் நுழைந்த சிறிது நேரத்தில் வெளியே நின்ற கும்பலுக்கு சிக்னல் கொடுத்திருப்பார். அந்த கும்பல் திடீரென நுழைவது போல் நடித்து தொழில்அதிபரை மிரட்டி உள்ளனர்.

    அந்த பெண்ணும், அந்த கும்பலும் தொழில் அதிபர்களை குறித்து பணம் பறிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். தொழில்அதிபர் துணிச்சலாக புகார் அளித்துள்ளதால் இந்த விவகாரம் வெளியே தெரிந்துள்ளது.

    இதனால் அந்த பெண்ணை பிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர். முதல்கட்டமாக பெண்ணின் செல்போன் எண்ணை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது. போலீசார் தேடுவதை அறிந்து அவர் தலைமறைவாகி விட்டார்.

    அவரையும், அவருடன் தொடர்புடைய கும்பலையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் கேரளா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று அவர்களை தேடி வருகிறார்கள்.

    அந்த கும்பல் சிக்கும்பட்சத்தில் அவர்களிடம் ஏமாந்த தொழில்அதிபர்கள் விவரமும் வெளிச்சத்துக்கு வரும்.

    ×