search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோமானேரி"

    • மனுநீதி நாள் முகாமிற்கு பஞ்சாயத்து தலைவர் கழுங்கடி தலைமை தாங்கினார்.
    • முகாமில் இலவச வீட்டு மனை பட்டா உள்பட நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் ஒன்றியம் கோமானேரி பஞ்சாயத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் கழுங்கடி தலைமை தாங்கினார். யூனியன் கவுன்சிலர் பிரனிலா கார்மல் முன்னிலை வகித்தார். ஆர்.டி.ஓ. புகாரி வரவேற்று பேசினார். முகாமில் மாவட்ட கூடுதல் துணை கலெக்டர் ஞானதேவ் சுபம் தாக்கரே கலந்து கொண்டு 163 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    இதில் முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனை பட்டா மற்றும் வரைவுபட்டா உள்பட நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ஸ்டெல்லா மேரி கலந்து கொண்டு அரசின் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். மாவட்ட வழங்கல் அலுவலர் இப்ராஹிம், தனி தாசில்தார் லெனின், மண்டல துணை தாசில்தார் மைக்கில், தலைமையிடத்து துணை தாசில்தார் கோமதி சங்கர், வட்ட வழங்கல் அலுவலர் அகிலா, தேர்தல் துணை தாசில்தார் தங்க சாமி மற்றும் ஊராட்சி ஒன்றிய கமிஷனர் ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ் குமார், சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ், பஞ்சாயத்து துணை தலைவர் ஐகோர்ட் துரை மற்றும் அரசு துறை அதிகாரிகளும், உள்ளாட்சி பிரதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாமில் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளும் உளுந்து பயிர் வகைகளும், தார்பாய்களும் வழங்கப்பட்டன. முடிவில் சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா நன்றி கூறினார்.

    ×