search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா தடுப்பு வழிகள்"

    • சமூக இடைவெளியை கடைபிடிப்பதும், சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றுவதும் அவசியமாகிறது.
    • மூன்றாவது தவணை தடுப்பூசியையும் போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை அள்ளி வழங்குகிறது. கொரோனா கடும் தொற்று அலைகளுக்கிடையே, தொழிலாளருக்கு பணிவாய்ப்பையும் மறுக்காமல் பின்னலாடை நிறுவனங்கள் வழங்கின. தற்போதைய மந்தமான வர்த்தகச்சூழலிலும் நெருக்கடியான தருணத்திலும்கூட, தொழிலாளருக்கு வேலைவாய்ப்பு தொடர்கிறது.

    தற்போது கொரோனா பரவல் உள்ள நிலையில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்குவதோடு, முடிந்தவரை சமூக இடைவெளியை கடைபிடிப்பதும், சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றுவதும் அவசியமாகிறது.எனவே தொற்று பாதிப்புகள் அதிகமுள்ள மாவட்டங்களின் நிர்வாகங்கள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அந்த வகையில் வெளிமாவட்ட, வெளிமாநில தொழிலாளர் அதிகம் வசிக்கும், திருப்பூரில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

    முடிந்தவரை பொதுமக்களே, தங்களைத் தற்காத்துக்கொள்வது தான் சிறந்ததாக இருக்கும். தொழில்துறையினரும், தொழிற்சாலைகளில், தொற்று தடுப்பு விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.தொழிலாளருக்கும் இதுதொடர்பான விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்ட இருக்க வேண்டும்.வணிக மையங்களிலும், விழாக்களிலும் கூட்ட நெரிசலை சிறிது நாட்களுக்கு தவிர்ப்பதே நல்லது.பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு செயல்படுத்தப்படுவதில்லை. ஆனால், அபராதம் விதித்தபின் தான் முக கவசம் அணிய வேண்டும் என்ற கட்டாய சூழலை பொதுமக்கள் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதையும் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

    இரண்டு டோஸ் தடுப்பூசியுடன் நில்லாமல், முன்னெச்சரிக்கையாக மூன்றாவது தவணை தடுப்பூசியையும் போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த ஆர்வமும், அக்கறையும் குறைவாக இருக்கிறது.வருமுன் காப்பதுதான் சிறந்தது. இதை உணர்ந்தால், ஒவ்வொருவரும் தாங்களாக முன்வந்து பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்வர். தொற்றில்லா சூழலை உருவாக்குவோம் என்று ஒவ்வொருவரும் உறுதிமொழி ஏற்க வேண்டிய தருணம் இது. எனவே கொரோனா தடுப்பு வழிகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.  

    ×