search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடுதல் நீர் வரத்து"

    • மேற்கு ெதாடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன.
    • 15 ஆண்டுகளுக்கு பிறகு மூலவைகையாற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் உற்சாகமாக குளியல் போடுகின்றனர்.

    வருசநாடு:

    மேற்கு ெதாடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. மேகமலை பகுதியில் பெய்து வரும் கன மழையால் சுருளி அருவியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொட ர்வதாக வனத்துறையினர் அறிவித்தனர்.

    மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்ததால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வழக்கமாக ஆடி மாதத்தில் மூலவைகையாறு தண்ணீரின்றி வறண்டே காணப்படும். இந்த ஆண்டு பருவமழை கைகொடுத்த தால் அரசரடி, வெள்ளி மலை, கண்டமனூர், வருசநாடு பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் மூலவைகையாற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    இது குறித்து அப்பபகுதி பொதுமக்கள் கூறுகையில், வழக்கமாக ஆடி மாதத்தில் தண்ணீர் வரத்து குறைவாகவே இருக்கும். 15 ஆண்டுகளுக்கு பிறகு மூலவைகையாற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் உற்சாகமாக குளியல் போடுகின்றனர். சிறுவர்களும் ஆற்றில் இறங்குகின்றனர். ஆபத்தை உணராமல் செல்லும் இவர்களை கண்காணித்து அறிவுரை வழங்க வேண்டும்.

    மேலும் விவசாய பணிகளும் மும்முரம் அடைந்துள்ளன. மேலும் இப்பகுதி கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கும் தீர்வு கிடைத்துள்ளது என்றனர்.

    ×