search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூகுள் தேடல்"

    • எரிக் ரிச்சின்ஸ் இறப்பிற்கு காரணம் பெண்டனில் எனப்படும் சக்திவாய்ந்த வலிநிவாரணி மருந்துதான் காரணம் என தெரியவந்தது.
    • கணவருக்கு ஓட்கா மதுபானம் அளித்ததாகவும், அதன் பிறகு அவர் மூர்ச்சையானதாகவும் மனைவி கோரி ரிச்சின்ஸ் கூறியிருந்தார்.

    அமெரிக்காவில் உள்ள உட்டா மாநிலத்தில், சம்மிட் கவுண்டியில் வசித்தவர், கோரி டார்டன் ரிச்சின்ஸ் (33). இவரது கணவர் எரிக் ரிச்சின்ஸ். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் எரிக் ரிச்சின்ஸ் திடீரென காலமானார்.

    இதனையடுத்து சில நாட்கள் கழித்து, கோரி ரிச்சின்ஸ் தனது கணவரின் மரணத்திற்கு பிறகு தாம் அனுபவித்து வந்த சோகத்தை பற்றி குழந்தைகளுக்கு, "என்னோடு இருக்கிறீர்களா?" (Are You With Me?), என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி பிரபலமானார். தனக்கும், தன் குழந்தைகளுக்கும் நிம்மதி கிடைக்க வேண்டியே இந்த புத்தகத்தை தாம் எழுதியிருப்பதாக பேட்டி அளித்திருந்தார். இவருக்கு பலரும் தமது அனுதாபங்களை தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கில் திடுக்கிடும் திருப்பமாக, எரிக் இறப்பிற்கு காரணம் அதிக அளவு அவர் உடலில் காணப்பட்ட, 'ஃபெண்டனில்' (Fentanyl) எனப்படும் சக்திவாய்ந்த வலிநிவாரணி மருந்துதான் என்றும், அதை அளவுக்கதிகமாக அவருக்கு கொடுத்தது அவர் மனைவி, கோரி ரிச்சின்ஸ் தான் என்றும் காவல்துறை ஆதாரத்துடன் கண்டுபிடித்து அவரை கைது செய்திருக்கிறது.

    செய்திகளின் அடிப்படையில், மூன்று குழந்தைகளின் தாய் கோரி, தனது கணவர் எரிக் ரிச்சின்ஸுக்கு, மார்ச் 2022ல் ஃபெண்டனில் என்ற வலி நிவாரணி மருந்தை அளவுக்கதிகமாக கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். விசாரணையில், அவர் கூகுள் தளத்தில் குற்றச்செயல் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்களை தேடியது தெரியவந்துள்ளது.

    அதாவது, உட்டாவில் உள்ள நீண்ட கால சிறைதண்டனை கைதிகளுக்கான சிறைச்சாலைகள் மற்றும் அமெரிக்காவில் உள்ள பணக்காரர்களுக்கான சொகுசு சிறைச்சாலைகள் பற்றிய தகவல்களை அவர் இணையத்தில் தேடியிருக்கிறார்.

    மேலும் தான் தேடும் செய்திகளை நீக்கிவிட்டாலும், நீக்கப்பட்ட செய்திகளை புலனாய்வாளர்களால் பார்க்க முடியுமா? ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீட்டு உரிமை கோருபவர்களுக்கு பணம் செலுத்த எவ்வளவு நேரம் எடுக்கும்? உண்மை கண்டறியும் சோதனைக்கு போலீசார் ஒருவரை கட்டாயப்படுத்த முடியுமா? மற்றும் இறப்பு சான்றிதழில் மரணத்திற்கான காரணத்தை மாற்ற முடியுமா? என்றெல்லாம் அவர் வலைதளங்களில் தேடியுள்ளார்.

    விசாரணையின்போது வெளியான இந்த தகவல்களால், அவரால் சமூகத்திற்கு கணிசமான ஆபத்து என நீதிபதி குறிப்பிட்டார். அத்துடன், அவரை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார்.

    "புலனாய்வு விசாரணையின் கீழ் இருப்பதற்கான அறிகுறிகள்" மற்றும் "இறப்புக்கான காரணத்துடன் நிலுவையில் உள்ள மரணச் சான்றிதழுக்கான இழப்பீடு வழங்குவதில் தாமதம்" என்று தலைப்பிடப்பட்ட கட்டுரைகளை கோரி படித்ததாக ஊடக செய்தி தெரிவித்துள்ளது.

    இதேபோல் "நலோக்சோன் ஹெராயின் போன்றதா?", "இயற்கைக்கு மாறான மரணம் என்று கருதப்படுவது என்ன?" மற்றும் "கோரி ரிச்சின்ஸ் கமாஸின் நிகர மதிப்பு" ஆகிய தகவல்களை தேடியதாகவும் அச்செய்தி தெரிவிக்கிறது.

    இதுபற்றி அவரது தரப்பு வழக்கறிஞர் கிளேட்டன் சிம்ஸ் கூறும்போது, ஆதாரங்கள் எவ்வாறு சேகரிக்கப்படுகின்றன என்பதைப் பார்ப்பதற்கு வெறுமனே தனது வழக்கு குறித்து ஆராய்ந்ததாகவும், "அவர் குற்றவாளி என சுட்டிக்காட்டும் எதுவும் அங்கு இல்லை" என்றும் தெரிவித்தார்.

    எரிக் ரிச்சின்ஸின் சகோதரி ஏமி ரிச்சின்ஸ் அளித்த வாக்குமூலத்தில், "எரிக் பயங்கரமான சூழ்நிலையில் இறந்தார். அவர் என்னவெல்லாம் சகித்து கொண்டிருக்கிறார் என்பதை நினைத்து நான் வேதனைப்படுகிறேன்" என கூறியிருக்கிறார். ஒரு புறம் எனது சகோதரனின் இறப்பிலிருந்து ஆதாயம் தேடிக் கொண்டு, மறுபுறம் துக்கத்தில் இருக்கும் விதவையாகவும், பாதிக்கப்பட்டவராகவும் கோரி தன்னை காட்டிக்கொண்டிருக்கிறார் எனவும் ஏமி ரிச்சின்ஸ் கூறியுள்ளார்.

    மார்ச் 2022ல் ஒருநாள் நள்ளிரவில் கோரி ரிச்சின்ஸ், காவல்துறையை தொடர்புகொண்டு தனது கணவர் அசைவற்று கிடப்பதாகவும், உடல் குளிர்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். தனது கணவருக்கு ஓட்கா பான கலவை அளித்ததாகவும், அதன் பிறகு சில மணி நேரத்தில் அவர் மூர்ச்சையாகி கிடந்ததாகவும் அதிகாரிகளிடம் கோரி ரிச்சின்ஸ் கூறியிருந்தார்.

    ஆனால், எரிக் ரிச்சின்ஸ் உடலை பரிசோதித்த மருத்துவர், அவர் ஃபெண்டனில் எனப்படும் மருந்தை வழக்கமாக உட்கொள்வதைவிட ஆபத்தை விளைவிக்கும் வகையில் 5 மடங்கு அதிகமாக உட்கொண்டதால் இறந்திருப்பதாக தெரிவித்தார்.

    நீதிமன்றத்தில் தாக்கல் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி, டிசம்பர் 2021 மற்றும் பிப்ரவரி 2022க்கு இடைப்பட்ட காலத்தில், எரிக் ரிச்சின்ஸ், போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒரு நபருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில், முதுகு வலிக்காக ஒரு முதலீட்டாளருக்கு பரிந்துரைக்கப்பட்ட வலி மருந்துகள் தேவைப்படுவதால், அதன் பெயரை அனுப்புமாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த காலத்தில் கோரி ஹைட்ரோகோடோன் மாத்திரைகளை பெற்றுள்ளார். அதற்கு பிறகு அதை விட வீரியமிக்க ஒரு மருந்தை கேட்டுள்ளார். மூன்று நாட்களுக்குப் பிறகு அந்த மருந்துகளைப் பெற்றுள்ளார். பிறகு கணவன்-மனைவி இருவரும் காதலர் தின விருந்து சாப்பிட்டுள்ளனர். அதற்கு பிறகு எரிக் ரிச்சின்ஸ் நோய்வாய்ப்பட்டார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, கோரி ரிச்சின்ஸ் மேலும் அதிக ஃபெண்டனிலை பெற்றிருக்கிறார்.

    இந்த வழக்கு அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×