search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தைகளுடன் பழகுங்கள். நேர்மறை எண்ணங்கள்"

    • குழந்தைகள் செய்யும் சேட்டைகளை அறியாமலேயே ரசித்துக் கொண்டு இருப்போம்.
    • குடும்ப உறவுகளுக்கு இடையே உள்ள பிணைப்பு வலுப்படும்.

    குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது நம்முடைய உளவியல், நல்வாழ்வு மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் ஆழமான, நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என பல்வேறு உளவியல் ஆராய்ச்சிகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

    குழந்தைகள் செய்யும் சேட்டைகள், குறும்புத்தனம், சிரிப்பு, அழுகை என அவர்களின் செயல்பாடுகள் அனைத்தையும் நம்மை அறியாமலேயே ரசித்துக் கொண்டு இருப்போம். இந்த ரசனையே நமக்குள்ளும், நம்மைச் சுற்றியும் நேர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்கும். இது புதிதாக ஒரு இடத்திற்கு மேற்கொள்ளும் பயணத்தின்போது நமக்கு கிடைக்கும் அனுபவத்துக்கு இணையாக இருக்கும்.

    குழந்தைகளுடன் நேரத்தை செலவிடும்போது குடும்ப உறவுகளுக்கு இடையே உள்ள பிணைப்பு வலுப்படும். இது நீடித்த இனிமையான நினைவுகளை உருவாக்கும்.

    * பொறுமை, நன்றி உணர்வு, மகிழ்ச்சி என குழந்தைகளுடன் நேரத்தை செலவிடும்போது நமக்குள் பல நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.

    * குழந்தைகளுடன் விளையாடும்போது நம்முடைய பொறுப்புகளையும், கவலைகளையும் பற்றி சிந்திப்பதை தற்காலிகமாக ஒதுக்கி வைப்போம். இதன் மூலம் மன அழுத்தம் குறையும்.

    * குழந்தைகளிடம் பழகுவதற்கு பொறுமை அவசியமானது. தொடர்ந்து அவர்களிடம் பழகும்போது. காலப்போக்கில் நமக்குள் பொறுமை மற்றும் சகிப்புத் தன்மை தானாகவே உருவாகி விடும்.

    * குழந்தைகளின் உலகம் பெரும்பாலும் கற்பனை விளையாட்டு அல்லது புதிய படைப்புகளையே உள்ளடக்கி இருக்கும். அவர்களுடன் பழகுவது உங்களின் படைப்பாற்றல் மற்றும் கற்பனைத் திறனை மேம்படுத்திக் கொள்ள வழிவகுக்கும்.

    * குழந்தைகளுடன் தொடர்புகொள்வது, நம் முடைய தகவல்தொடர்பு திறன்களை மேம்படுத்தும். அதன்மூலம் மற்றவர்கள் கூறுவதை சரியாக புரிந்து கொள்ளவும், உங்களுடைய கருத்துக்களை மற்றவர்களுக்கு தெளிவாக விளக்கவும். மற்றவர்கள் பேசுவதை கவனமாக கேட்கவும் முடியும்.

    * குழந்தைகளுடன் பழகி அவர்களின் உணர்ச்சிகள் மற்றும் தேவைகளை புரிந்துகொள்வது, உங்களுடைய இரக்க குணத்தை மேம்படுத்தும்.

    * படம் வரைவது. இசைக்கருவிகளை வாசிப்பது. விளையாடுவது என குழந்தைகளுடன் பலவிதமான செயல்பாடுகளில் ஈடுபடலாம். இது நமக்கான புதிய பொழுதுபோக்கை கண்டறியவும், நம்முடைய பழைய திறன்களையும், ஆர்வத்தையும் புதுப்பிக்கவும் உதவும்.

    * குழந்தைகளுக்கான தேவைகள் மற்றும் அவர் கள் எதிர்கொள்ளும் சவால்களை கையாள்வதன் மூலம். நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் சிக்கலை தீர்க்கும் திறனை மேம்படுத்த முடியும். எந்த ஒரு சூழ்நிலையிலும் மாற்றி யோசித்து தீர்வு காணும் திறன் உருவாகும்.

    * வாழ்வில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று குழந்தைகளுக்கு நாம் வழிகாட்டுவதன் மூலம். நம்முடைய தலைமைத் திறனை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

    * தற்போதைய தொழில்நுட்பக் கருவிகளை கையாள்வதில் பெரும்பாலான குழந்தைகள் பெரியவர்களை விட சிறந்து விளங்குகிறார்கள். அவர்களுடன் நேரத்தை செலவிடுவதன் மூலம், பல புதிய விஷயங்களை அறிந்துகொள்ள முடியும்.

    * குழந்தைகள் இந்த உலகை புதிய கண்ணோட்டத்துடன் பார்ப்பார்கள். அவர்களுடன் பழகும்போது நமக்கும் அனைத்து விஷயங்களையும் வேறுபட்ட கண்ணோட்டத்தில் அணுகக்கூடிய திறன் உண்டாகும்

    ×