search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குதிரை வண்டி பந்தயம்"

    • போக்குவரத்துக்கு இடையூறாக நடத்தப்பட்டதால் நடவடிக்கை
    • போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் தீவிரமாக கண்காணித்தனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலையில் குதிரை வண்டிகளை வைத்து ஓட்ட பந்தயம் நடத்துகின்றனர்.

    இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு ள்ளாவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வந்தனர்.

    அதன்படி போலீசார் இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டதோடு தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று போக்குவரத்துக்கு இடையூறாக குதிரை பந்தயம் நடந்தது.

    இதனை பார்த்த போலீசார் உடனே அந்த குதிரை வண்டியை விரட்டி பிடித்தனர்.

    மேலும் பந்தயம் நடத்திய வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சேர்ந்த பிரேம் (வயது 23) என்ற இளைஞரை வாணியம்பாடி தாலுகா போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து குதிரை வண்டியை பறிமுதல் செய்தனர்.

    மேலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக தேசிய நெடுஞ்சாலைகளில் குதிரை பந்தயம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ×